கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன், க.ஜெய்சங்கர்,  வசந்தவேல் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களுக்கு 5 ஆயிரம் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. கதை – வசனம், நாவல், வாழ்க்கை வரலாறு, திரைப்படத் தயாரிப்பு, அரசியல்… இப்படி பல துறைகளில் முத்திரை பதித்தவர். “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் மரணம் இல்லை” என்று தன்னம்பிக்கையுடன் பாடினார் என்றாலும், அது உண்மை. கண்ணதாசனின் பாடல்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது மட்மல்ல, என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். கண்ணதாசன் வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்தது. […]

Read more

கவியரசு கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை

சிங்காரி பார்த்த சென்னை, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை 600017, பக். 184, விலை 80ரூ. சினிமாவில் நடிக்க வந்து மானத்தோடு ஊர்திரும்பும் ஒரு கிராமத்து பெண் ணமையமாக கொண்ட நூல். 32 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக மலர்ந்திருக்கிறது. ஒன்று நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது நடுரோட்டில் அலைகிறார்கள். சில நடிகைகள் கடத்தல் மன்னர்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் சம்பாதிப்பதற்கு தங்கள் உடம்பைக் கொடுத்து, நானும் என் கணவரும் அமெரிக்காவிற்கு போகிறோம், ஜெனீவாவிற்கு போகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.சு. இளங்கோ, இசையமுது பதிப்பகம், பி3, சுங்கவரி அலுவலர் குடியிருப்பு, 75, தேவாலய முதன்மைச் சாலை, பெருங்குடி, சென்னை 96, பக். 488, விலை 180ரூ. துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததைப்போல பாரதி வழித்தடத்தில் பாரதிதாசன் தோன்றினார் என்ற நூலாசிரியரின் முன்னுரையே நூலுக்கு ஒரு கம்பீரம் தருகிறது. பாரதிதாசனின் திரைத்தமிழ் வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வு நூல் இது. அவர் எழுதிய ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்களை வைத்து ஆய்வு செய்துள்ளார் […]

Read more