கவியரசு கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை

சிங்காரி பார்த்த சென்னை, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை 600017, பக். 184, விலை 80ரூ.

சினிமாவில் நடிக்க வந்து மானத்தோடு ஊர்திரும்பும் ஒரு கிராமத்து பெண் ணமையமாக கொண்ட நூல். 32 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக மலர்ந்திருக்கிறது. ஒன்று நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது நடுரோட்டில் அலைகிறார்கள். சில நடிகைகள் கடத்தல் மன்னர்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் சம்பாதிப்பதற்கு தங்கள் உடம்பைக் கொடுத்து, நானும் என் கணவரும் அமெரிக்காவிற்கு போகிறோம், ஜெனீவாவிற்கு போகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். அவர்களும் அவர்களையே மூலதனமாக்கி பல வழிகளில் கொள்ளையடிக்கிறார்கள்.(பக்.91) இப்படி கவியரசரின் சினிமா உலக அனுபவங்கள், யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. நல்ல பொழுதுபோக்கு நாவல். -பின்னலூரான்.  

—-

 

லலிதாம்பிகா அந்தர்ஜனம், தமிழில்-அரசி (அர. சிங்காரவடிவேலன்), சாகித்ய அகடமி, 40, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 142, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-6.html

கேரள மாநிலத்தில் நம்பூதிரி குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண்மணி, புகழ் பெற்ற எழுத்தாளர். பெண்ணியவாதி. சமூக ஆர்வலர். தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் இவரை சுயமரியாதைக்காரர்கள் கோவில் கட்டிக் கும்பிட்டிருப்பர் எனச் சொல்லும் அளவுக்கு பல சீர்திருத்தங்களையும், மூடப்பழக்க ஒழிப்பு இயக்கங்களையும் நடத்திய, அற்புதமான இருபதாம் நூற்றாண்டுப் பெண்மணி. நல்ல மொழி பெயர்ப்பு. நல்ல புத்தகம்.  

—-

 

ஆய்வுச் சுடர்கள், முனைவர் ந. வெங்கடேசன், ஐயா நிலையம், பக். 111, விலை 70ரூ.

ஆய்வு அரங்குகளில் வாசிக்கப்பட்ட, தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூலிது. இந்த நூலில் சங்க இலக்கியம் பற்றி 7, பக்தி இலக்கியம் பற்றி 5, கலைஞர் பற்றி3, பெரியாரைப் பற்றி 1, அண்ணாவைப் பற்றி 2, கவிஞர் வைரமுத்துவைப் பற்றி 3, என 21 கட்டுரைகள் உள்ளன. மகாவாக்கிய ஆராய்ச்சியில் பிரக்ஞானம் பிரமம், அகம் பிரம்மாஸ்மி, தத்துவமசி, அயம் ஆத்மா பிரமம் என்ற நான்கு வேத வாக்கியங்களை ஆய்கிறார். திருவாசகத்தின் நுட்பமும் திருமுறைகளில் ஜாதி ஒழிப்பைத் தொடங்கிய திருஞான சம்பந்தர் பற்றிய செய்தியும், படிப்பவருக்கு விருந்தாக அமையும். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி; தினமலர், 12/10/2013. சிங்காரி பார்த்த சென்னை, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *