கவியரசு கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை

சிங்காரி பார்த்த சென்னை, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை 600017, பக். 184, விலை 80ரூ. சினிமாவில் நடிக்க வந்து மானத்தோடு ஊர்திரும்பும் ஒரு கிராமத்து பெண் ணமையமாக கொண்ட நூல். 32 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக மலர்ந்திருக்கிறது. ஒன்று நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது நடுரோட்டில் அலைகிறார்கள். சில நடிகைகள் கடத்தல் மன்னர்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் சம்பாதிப்பதற்கு தங்கள் உடம்பைக் கொடுத்து, நானும் என் கணவரும் அமெரிக்காவிற்கு போகிறோம், ஜெனீவாவிற்கு போகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். […]

Read more

திமிறி எழு

திமிறி எழு, அ. ஜெயசீலி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98, பக். 72, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-985-1.html ஒரு பெண் பிறந்தது முதல் சமுதாயத்தில் என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் ஆளாகிறாள் என்பதை எடுத்துக்காட்டுகளுடனும் புள்ளி விபரங்களுடனும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். குழந்தை பாலியல் வன்முறை, இளம்பருவம், தாய் என்ற தியாகத் திருவுருவம் என ஒரு பெண்ணின் அனைத்து நிலைகளிலும் நின்று அலசியுள்ளார். திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்கு […]

Read more

ஆய்வுச் சுடர்கள்

ஆய்வுச் சுடர்கள், முனைவர் ந. வெங்கடேசன், அய்யா நிலையம், பக். 112, விலை 70ரூ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, முந்தைய இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை, எதையும் விடாமல் அத்தனையையும், திறனாய்வு நோக்கில் இந்த நூல் அணுகுகிறது. பள்ளு என்னும் சிற்றிலக்கியம் காட்டும் மருத நில வளத்தையும், சைவத் திருமுறைகள் காட்டும் வாழ்வியல் செய்திகளையும், அழகாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் ஆசிரியர். மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பெறும், மு. வரதராசனாரின் உரைநடைத் திறனை வெளிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டிற்குரியது. தமிழ் இலக்கிய அறிமுகத்தையும், ஆய்வையும் நோக்கில் படையெடுக்கப்பட்டுள்ள இந்த […]

Read more