திமிறி எழு
திமிறி எழு, அ. ஜெயசீலி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98, பக். 72, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-985-1.html
ஒரு பெண் பிறந்தது முதல் சமுதாயத்தில் என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் ஆளாகிறாள் என்பதை எடுத்துக்காட்டுகளுடனும் புள்ளி விபரங்களுடனும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். குழந்தை பாலியல் வன்முறை, இளம்பருவம், தாய் என்ற தியாகத் திருவுருவம் என ஒரு பெண்ணின் அனைத்து நிலைகளிலும் நின்று அலசியுள்ளார். திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற கருத்து முற்றிலும் தவறானது. உண்மையில் எதிரியாக இருப்பது ஆணின் அன்பில்தான் பெண் நிறைவடைகிறாள் என்ற ஆண் ஆதிக்கக் கருத்துதான். பெண்ணுக்குப் பெண் சகோதரிதான் என்ற நல்லெண்ணத்துடன் வாழவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெண்களைத் தெய்வங்களாக நடத்த வேண்டாம். ரத்தமும், சதையும், உணர்வும், அறிவும், இதயமும் உள்ள மனிதர்களாக நடத்தினாலே போதும் என்று நூலை முடித்துள்ளது. பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை பசு மரத்தாணிபோல் நெஞ்சில் பதிக்கிறது. நன்றி: தினமணி, 21/11/11.
—-
மாய உறவுகள், தம்பி, பன்னீர்செல்வம், அம்சா பதிப்பகம், 12, கணபதி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 60ரூ.
படித்த பெண் தடம் புரளும் நிலையிலும் மீண்டும் நல் வாழ்க்கை வாழ்ந்து பெருமை கொள்கிறாள். சிறு நாவல்.
—-
ஆய்வுச் சுடர்கள், முனைவர் ந. வெங்கடேசன், அய்யா நிலையம், 1603, ஆரோக்கிய நகர், ஐந்தாம் தெரு, ஈ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் 613006, விலை 70ரூ.
சங்க இலக்கியம் முதல், தற்கால புதுக்கவிதை வரை ஆய்வு நடத்தி அதனை அனைவரும் படிக்கும் வகையில் ருசிகரமாக கொடுத்து இருக்கிறார். மகாவாக்கியம் பற்றிய விளக்கம். பெரியார், அண்ணா, கருணாநிதி, வைரமுத்து ஆகியோரின் பற்றிய ஆய்வு ஆகியவை படித்து பயன் பெறத்தக்க வகையில் உள்ளன. நன்றி; தினத்தந்தி, 12/9/12.