இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள்
இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள், க.ஜெய்சங்கர், அகநி, விலைரூ.120.
பல்வேறு கருத்துகள் அடங்கிய 12 கட்டுரைகளின் தொகுப்பு நுால். மெய்ப்பொருள் நாயனார் கட்டுரை மூலம் திருக்கோவிலுார் அரசாண்ட குறுநில மன்னர் என்றும், சைவம் பரப்பிய பெருமையையும் அறிய முடிகிறது. நுால் இரு வகைப்படும்.
ஒன்று நடப்பு காலத்திற்கு ஏற்றது. அடுத்தது காலம் கடந்தும் நிற்பது. உதாரணங்களுடன் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். செய்யுள் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பதையும் ஒரு கட்டுரை காட்டுகிறது. இலக்கண அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர் படிக்க ஏற்ற நுால்.
– சீத்தலைச்சாத்தன்
நன்றி: தினமலர், 9/1/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818