களிப்பூட்டும் கணிதம்
களிப்பூட்டும் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், விலைரூ.300.
கணிதத்தை எளிதாக கற்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். கணித அழகை ரசித்து, அதனுள் மூழ்கவைக்கும் விதமாக எளிமையாக படைக்கப்பட்டு உள்ளது. கணித சிந்தனைகள், கணித மன்ற செயல்பாடுகள், கணித விளையாட்டு, கணித மேதைகளின் சுருக்க வரலாறு என பல தலைப்புகளில் உள்ளது. கணித ஆர்வ களஞ்சியமாக அமைந்துள்ளது.
ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாவதை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலும், அவற்றிற்கு இடையேயான தொடர்புகளையும் அடுக்கமைவு மூலம் தகவலாக கோர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பெருந்தலைப்புகளின் கீழ், உரிய துணை தலைப்புகளில் தகவல்கள் அமைந்துள்ளன. எளிய வழிமுறைகளில் எண்கள் விளக்கம் பெற்றுள்ளன. தமிழில் வந்துள்ள கணித அறிதல் நுால்.
– பாவெல்
நன்றி: தினமலர், 2/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818