கிராம நிருவாகத்தின் புரட்சி

கிராம நிருவாகத்தின் புரட்சி, இரா.போசு, ரெயின்போ, விலைரூ.300.

வருவாய் கிராம நிர்வாகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். கிராம நிர்வாகத்தின் தோற்றம், அதில் பணியாற்றிய கர்ணம், மணியம், தலையாரி நியமன முறை, அவர்களின் பணி நிர்ணயம், போலீஸ் அதிகாரத்துடன் பணியாற்றிய தலையாரிகள் போன்ற விபரங்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன.

கிராம நிர்வாகத்தில் முதல் சட்டம், 1894ல் கொண்டு வரப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து கிராம உருவாக்கம் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு ஏற்ப நிர்வாக நடைமுறை போன்ற விபரங்களும் தரப்பட்டுள்ளன.

பரம்பரை பணியாளர்கள் பற்றிய விபரம், கிராம முன்சீப் என்ற பதவி பற்றியும் தெளிவாக தரப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில், கிராம நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் பற்றி விரிவாகத் தரப்பட்டுள்ளது. கிராம நிர்வாக விபரங்களை வரலாற்றுப் பூர்வமாக தொகுத்து தரும் நுால்.

– விநா

நன்றி: தினமலர், 9/1/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031397_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *