கிராம நிருவாகத்தின் புரட்சி
கிராம நிருவாகத்தின் புரட்சி, இரா.போசு, ரெயின்போ, விலைரூ.300. வருவாய் கிராம நிர்வாகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். கிராம நிர்வாகத்தின் தோற்றம், அதில் பணியாற்றிய கர்ணம், மணியம், தலையாரி நியமன முறை, அவர்களின் பணி நிர்ணயம், போலீஸ் அதிகாரத்துடன் பணியாற்றிய தலையாரிகள் போன்ற விபரங்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன. கிராம நிர்வாகத்தில் முதல் சட்டம், 1894ல் கொண்டு வரப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து கிராம உருவாக்கம் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
Read more