மணிவாசகர் அருளிய திருவாசகம்
மணிவாசகர் அருளிய திருவாசகம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 170ரூ.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கு உருகார் என்று கூறுவார்கள். சிவபெருமான் பற்றி மாணிக்கவாசகர் எழுதிய பாடல்கள் அவை. திருவாசகப் பாடல்கள் மொத்தம் 650. அப்பாடல்கள் கொண்ட அழகிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.
—-
ஸ்ரீஅருணாசல பஞ்சரத்னம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீ ரமண பக்த சமாஜம், சென்னை, விலை 80ரூ.
ரமண மகரிஷி அருளிய அருணாசல பஞ்சரத்னத்திற்கு எழுதப்பட்ட புதிய விரிவுரை, புலமையும் பக்தியும் பளிச்சிடும் பஞ்சரத்தினத்தின் மையகருத்து, பாடல்களில் அமைந்துள்ள கருத்துத்தொடர்பு, உலகின் பொய்மை, காயத்திரி மந்திரத்துடன் ஒப்பீடு போன்ற பகுதிகள் நூலின் அழகுக்கு அழகு கூட்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.
—-
ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள் 181, அருணாசலசாமிக்கண்ணு, குறிஞ்சி, சென்னை, விலை 80ரூ.
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள் செய்வது அசியம். 181 யோகாசனங்கள் பற்றி படத்துடன் விளக்குகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.