முஸ்லிம் சட்டம்
முஸ்லிம் சட்டம், எஸ்.ஏ.சையது காசிம் அறக்கட்டளை, திரியெம்பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 300ரூ.
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும், நபித்தோழர்களின் விளக்கத்தையும், தீர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டது முஸ்லிம் ஷரியத் சட்டம். ஷரியத் என்றால் பாதை, நேரிய பாதை, சட்டம் என்று பெவாருள். திருமணம், திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு அளிக்கும் மஹர் (மணக்கொடை) திருமண முறிவு (தலாக்), ஜீவனாம்சம், காப்பாளர் பொறுப்பு, கொடை, உயில், சொத்துரிமை போன்ற முஸ்லிம் சட்ட கோட்பாடுகளை பேராசிரியர் எச்.எம்.அபுல்கலாம் முஸ்லிம்சட்டம் என்ற தலைப்பில் அழகிய முறையில் விளக்கி இருக்கிறார். மேலும் இந்த நூலில் வக்பு வாரியம் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் பெரும் பயனளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/4/2014.
—-
ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
ராகு, கேது மற்றும் பிற கிரகங்களின் தோஷங்களினால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள், அவற்றைப் போக்கும் பரிகார முறைகள், மற்றும் நவகிரக தோஷம் நீக்கும் பரிகார ஸ்தலங்கள் பற்றி இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.
—-
தோழமையின் சுகமான நினைவுகள், செல்வ. அருண், ராஜா வெளியீடு, திருச்சி, விலை 50ரூ.
கவிதை தொகுப்பாக வந்துள்ள நூலில், நட்பின் தேவையையும், அதன் உன்னதத்தையும் விளக்கும் வகையில் கவிதைகள் அமைந்துள்ளன. வல்லவனாய் இருப்பதை விட நல்லவனாயிரு என்ற வாக்கிற்கு ஏற்ப நல்ல எண்ணங்களை மட்டுமே பெரும்பாலான கவிதைகள் பறைசாற்றுகின்றன. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.