துரோகம் வெட்கமறியாது

துரோகம் வெட்கமறியாது, தெ. சுந்தரமகாலிங்கம், வெண்ணிலா பதிப்பகம், விருதுநகர், பக். 176, விலை 140ரூ. சிற்றிதழ்கள், இலக்கிய மாத இதழ்கள், தினசரிகள் என்று ஒன்றுவிடாமல், கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு நூலாசிரியர் ஆற்றிய எதிர்வினைகளின் தொகுப்பே இந்நூல். குறிப்பாக தீராநதி, உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இவரது எதிர்வினைகள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. தமிழ் எழுத்துரு குறித்த ஜெயமோகனின் கட்டுரைக்கு எழுதப்பட்ட எதிர்வினை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக என்.ராம் அளித்த பேட்டிக்கான எதிர்வினைகள், கலைஞர் கருணாநிதியின் அரசியல் துரோக நிகழ்வுகள், முல்லை பெரியாறு, […]

Read more

உலகத் தகவல் களஞ்சியம் 100

உலகத் தகவல் களஞ்சியம் 100, பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. நமக்கு ஆச்சரியம் தரும் தகவல்கள், விசித்திரமான தகவல்கள், பயனுள்ள தகவல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை சிரமப்பட்டுத் தொகுத்துத் தந்திருக்கிறார் மனோஸ். பூமிக்கு வரும் ஆபத்து, மிதக்கும் விமான நிலையம், தனியாகக் கடலைக் கடந்த பெண், நாளிதழ் இல்லாத நாடு, இந்தியாவின் ஒரே பெண் சுல்தான் இப்படி ஏராளமான தகவல்கள். உலகின் முதல் பெண் டாக்டர் பற்றிய தகவல் மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது. ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்த கால கட்டத்தில் (1800ம் […]

Read more

தமிழில் சிறுபத்திரிகைகள்

தமிழில் சிறுபத்திரிகைகள், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், விலை 190ரூ. சிறுபத்திரிகைகள்தான் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன என்பது, இலக்கிய விமர்சகர்களின் பொதுவான கருத்து. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பிச்சமூர்த்தி முதலான இலக்கிய முன்னோடிகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்றவை சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். சிறு பத்திரிகைகளின் இலக்கியப்பணி குறித்து, முதுபெரும் எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வல்லிக்கண்ணன் அந்தக் காலத்து சிறு பத்திரிகைகளுடனும், சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த பெரிய எழுத்தாளர்களுடனும் நேரடி தொடர்பு கொண்டிருந்தவர். எனவே, அவர் எழுதியுள்ள […]

Read more
1 6 7 8