தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை

தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை, ஆர். நல்லகண்ணு, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. நாட்டின் குறிப்பாக தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். வறட்சியைப் போக்கும் வழிகள், கங்கை-காவிரி இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்சினைகள் போன்ற தலைப்புகளில் இந்திய கம்யூனிஸ்டு முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நதிநீர் இணைப்பை வலியுறுத்துகிறார். கங்கை காவிரி இணைப்பால் ஒரு கோடி ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி பிறக்கும். நாட்டின் ஒற்றுமையைம் ஒருமைப்பாடும் சிறக்கும் என்பதை ஆதாரத்துடன் […]

Read more

கலியின் கதை

கலியின் கதை, வயா பைபாஸ், சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 195ரூ. சாமானிய மனிதன் கிஷோர் பாபுவைப் பற்றிய கதை. பைபாஸ் ஆபரேஷனுக்குப் பிறகு அவர் உள்மன உலகிற்குச் சென்று சிக்கல்களில் சிக்கிப் போராடியவாறு கல்கத்தா நகரின் வீதிகளில் சுற்றி வருகையில் மூன்று விதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவை இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பைபாஸ் (இணை வழிப்பாதை) என்று சொல் இந்நாவலின் கரு. இன்றைய காலக்கட்டத்தில் யுக தர்மம் புறக்கணிக்கப்பட்டு, அதன் அருகாமையிலேயே வசதியான கிளை வழிகள் போடப்படுகின்றன. அடிப்படையாயுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எந்தந்த […]

Read more

மோடி

மோடி, வெளிச்சங்களின் நிழலில், கதிரவன், சிற்றுளி வெளியிடு, சென்னை, விலை 25ரூ. மோடி முகமூடி அணிந்து வரும் இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். தமிழகக் கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதை விமர்சித்திருக்கும் இந்நூல், நாட்டில் இந்துத்துவக் கொள்கைகள் நிகழ்த்துப்போகும் அபாயங்கள் பற்றி எச்சரிக்கிறது. நன்றி: இந்தியா டுடே, 6/4/2014.   —- க்ரோஷம், ஜுடித் பெல், வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், பக். 280, விலை 160ரூ. உலகின் வளர்ந்த நாடுகள் எல்லாம் டபிள்யூ.டி.ஓ., எப்.டி.ஏ., என்.ஏ.எப்.டி.ஏ., போன்ற பல […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழனிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை, காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை நேர மெல்லிய மழையில் நனைவதற்கு இணையானது. பழனிபாரதியின் இந்த கவிதை தொகுப்பும் அதுபோன்றதே. தொகுப்பு முழுக்க காதல் கவிதைகள் மட்டுமே இருந்தாலும் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த மின்மினிப் பூச்சி, நம்மை அறியாமல் விரல் இடுக்குகளில் இருந்து நழுவுவதைப்போல், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக அபூர்வா, உயிர்த்துளை, உன்னதம், உச்சிப்பூக்கள், இரவு, அதன்பிறகு, […]

Read more

அறிவுரைகள் ஜாக்கிரதை

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே […]

Read more

Globalisation of World politics

Globalisation of World politics, ஜான் பேலிஸ், ஸ்டீவ் ஸ்மித், ஓவன்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். உலகமயமாக்கல் உலகிற்கு வழங்கிய கொடை என்ன? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சக வெளியீடான, Globalisation of World politics An introduction to international relations என்ற நூலைப் படித்தேன். ஜான் பேலிஸ், ஸ்டீவ் ஸ்மித், ஓவன்ஸ் ஆகியோர் இதன் ஆசிரியர்கள். இந்நூல் என்னுள் பல எதிர்வினைகளை ஏற்படுத்தியது. மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிக்கிறான் என கம்பூனிஸ்டுகளை கேலி பேசுவதுண்டு. அகிலம் என சொல்லிகொண்டாலும், இவ்விரு ஊர்களும் […]

Read more

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம்

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. வெள்ளைக்காரர் ஹ்யூம் யாருக்காக பாடுபட்டார்? தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். மதுரையை நாயக்கர்கள்தான் ஆள வேண்டும். மாடவீதியை மன்னார்சாமிதான் ஆள வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து வலுத்து வரும் காலம் இது. இந்தச் சூழலில் பெ.சு.மணியின் இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம் என்ற புத்தகம் அவசியப்படுகிறது. மாநில எல்லைகளை கடந்து, மொழி வேற்றுமையைப் புறந்தள்ளி, இந்தியப் பெருநாட்டின் மக்களுக்காக நடத்தப்பட்ட […]

Read more

ஹீலர்

ஹீலர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி அண்டு தி டிரான்ஸ்பர்மேஷன் ஆப் இந்தியா, போர்ட்போலியோ/பெங்குயின், பக். 548, விலை 899ரூ. மருத்துவர்களுக்கு விடுமுறை உண்டா? தங்கள் மூளையை இந்திய வல்லுனர்கள் வெளிநாட்டில் அர்ப்பணித்துக் கொண்டிருந்த தருணத்தில் அதை திரை திருப்பி இந்தியாவிற்கே பயன்படச் செய்த மேதைதான் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி என இந்திராவால் போற்றப்பட்டவர். கடந்த 1984ம் ஆண்டு, தம் 50ஆவது வயதில், இந்தியாவில் நல்வாழ்வு, ஆரோக்கியத்திற்காக, அப்போலோ மருத்துவமனையை, சென்னையில் துவக்கினார். இன்று உலகெங்கும் 50க்கும் மேற்பட்ட கிளைகளுடன் விரிந்து பரந்து […]

Read more

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள்

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது அனைவரது லட்சியம், கனவாகவே இருக்கும். அதற்கான சூழலும், வழிகாட்டுதலும் அமையப்பெற்றவர்கள் அந்த இலக்கை எட்டிப்பிடித்து விடுகிறார்கள். அத்தகைய வழிகாட்டுதலை செவ்வனே செய்துள்ளது இந்த நூல். சிவில் சர்வீசஸ் தேர்வின் கீழ் எத்தனை பணிகள் வருகின்றன. சிவில் சர்வீசஸ் தேர்வை யார், யார் எழுதலாம்? எத்தனை முறை எழுதலாம்? அதற்கான வயது வரம்பு என்ன? , அதற்கு நாம் தேர்வு செய்ய […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நீண்ட நெடிய காவியங்களைப் படித்தவர்களுக்கு, அவரது மோகினித் துவு என்ற குறுநாவல் புதுவித அனுபவத்தைத் தரும். பர்மாவிலிருந்து தமிழகத்திற்குத் தப்பி வரும் ஒரு கப்பல் பயணியின் அனுபவத்திலிருந்து கதையை ஆரம்பிப்பதே புதுவிதமாக உள்ளது. கற்பனை நாவல் என்றாலும் கதை மாந்தர் பற்றிய வர்ணனைகள், நாவலில் வரும் திருப்பங்கள், கதையை சுவாரஸ்யப்படுத்த அவர் கையாளும் மன்னர்கள் […]

Read more
1 5 6 7 8