தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை
தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை, ஆர். நல்லகண்ணு, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ.
நாட்டின் குறிப்பாக தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். வறட்சியைப் போக்கும் வழிகள், கங்கை-காவிரி இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்சினைகள் போன்ற தலைப்புகளில் இந்திய கம்யூனிஸ்டு முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நதிநீர் இணைப்பை வலியுறுத்துகிறார். கங்கை காவிரி இணைப்பால் ஒரு கோடி ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி பிறக்கும். நாட்டின் ஒற்றுமையைம் ஒருமைப்பாடும் சிறக்கும் என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 20/7/2014.
—-
தமிழிசைச் செல்வம், சீர்காழி ஆறுமுகம், தமிழ் ஆய்வரங்கம், மறைமலைநகர், விலை 50ரூ.
ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை அனைத்தையும் தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் இசையைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். இதில் ஓசைக்கும், இசைக்கும் உள்ள வேறுபாட்டையும், தாலாட்டு முதல் இறந்தவர் ஆன்மா சாந்தியடைதல் வரை பாடப்படும் 14 பாடல்கள் எப்படியெல்லாம் நம் வாழ்வில் பாடப்பட்டு வருகிறது என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 20/7/2014.