நரேந்திரமோடி

நரேந்திரமோடி, எஸ்பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை 17, பக். 200, விலை 125ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-6.html நாட்டின் பிரதமராக கூடியவர் என்று எதிர்பார்க்கப்படும் நரேந்திர மோடியின் நம்பகத்தன்மை குறித்து பாஜகவின் எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் பலத்த சர்ச்சையைக் கிளப்பிவரும் நிலையில், மோடியின் நற்குணங்களையும், நல்லாட்சித் திறனையும் விளக்கும் நோக்கில் இந்த நூலை ஆசிரியர் படைத்துள்ளார். அரசியல் வித்தகராகவும், பேச்சாளராகவும் அறியப்பட்ட மோடி, கவிஞர், எழுத்தாளர் (அதிலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சாந்தினி குஜராத்தி பத்திரிக்கைக்கு அதிக சிறுகதைகள் எழுமயவர்), சிறந்த புகைப்படக் கலைஞரும்கூட என்பதை எடுத்துரைத்துள்ளார். மோடி பள்ளிப் பருவத்தில் தேசபக்தி நாடகங்களில் நடித்து 17 வயதில் சாமியாராக இமயமலைக்குப் போனது, திரும்பி வந்து மாமாவின் டீக்கடையில் பணியாற்றியது. ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் ஆனது. நெருக்கடி நிலை காலத்தில் குஜராத் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட தலைமறைவுத் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மோடி ஏற்பாடு செய்தது, அத்வானியால் பாரதிய ஜனதா கட்சிப் பணிக்கு அழைத்து வரப்பட்டது, படிப்படியாக வளர்ந்து குஜராத்தில் அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்தது. 2001இல் அந்த மாநில முதலமைச்சராகப் பதவியேற்றது. அதற்குப் பின் பல சோதனைகளைச் சமாளித்து நின்று, தற்போது பிரதமர் பதவி வேட்பாளராக நிற்பது வரை எளிய நடையில் பல தகவல்கள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. குஜராத் முதல்வராக முதன்முறையாகப் பதவியேற்றதும் புஜ் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோடி அரசு சிறந்த முறையில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றது, குஜராத் கலவரத்தை அடக்க மோடி எடுத்த உறுதியான முடிவுகள், உள்கட்சிப் பூசல் மற்றும் எதிர்க்கட்சி விமர்சனங்களை மோடி சமாளித்த விதம், குஜராத் மாநிலத்தில் மோடி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை நூல் விவரிக்கிறது. நெருக்கடி நிலையை இந்திரா கொண்டுவந்தது, கோத்ரா ரயில் எரிப்பு போன்ற முக்கிய சமூக, அரசியல் நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காண்பிக்கிறது. எனினும் நூலில் மோடி ஆதரவு நெடி அடிப்பதை மறுப்பதற்கில்லை. வட மாநிலப் பெயர்களான மக்கன் லால், மல் சந்த், ஏக்நாத் ரானடே ஆகியவை பிழைகளுடன் எடுத்தாளப்பட்டிருப்பதை நூலாசிரியர் தவிர்த்திருக்கலாம். நன்றி: தினமணி, 7/4/2014.

Leave a Reply

Your email address will not be published.