காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ.

வரலாறும் வாழ்க்கையும் பழமையானது. அதே சமயம் அவை தங்களை நாள்தோறும் புதுப்பித்துக் கொள்கின்றன. வாழ்க்கை வழங்கிய நிகழ்வுகள், நண்பர்கள், ஏற்பட்ட வியத்தகு அனுபவங்கள் வழியே தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் வாழ்க்கை பற்றிய எண்ணப் பதிவுகளாக புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இக்கால இளைஞர்களும், அக்கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் கட்டுரைகள் அனைத்தும் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளைச் சொல்கின்றன. 1940களில் சங்கீத ரசிகர்கள், சினிமா ரசிகர்களிடையே ஒன்ஸ்மோர் என்ற சொல் பிரபலம். பிரபலமான பாடலை, பிரபலங்களின் கச்சேரிகளில் மறுபடி, மறுபடி பாடும்படி ரசிகர்கள் கேட்பது வழக்கம். இதைத் தவிர்க்கும்பொருட்டு சினிமா, கச்சேரி, பிட்நோட்டீஸ்களில் ஒன்ஸ்மோர் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது என்று அச்சடிப்பதும் வழக்கம். இதை காற்றின் பாடல் என்ற நூலின் முதல் கட்டுரையில் தெரிந்து கொள்கிறோம். அந்த காலத்தில் பேனா நன்றாக எழுதுகிறதா? என்பதற்கு எகிப்து என்ற சொல்லை ஆங்கிலத்தில் கூட்டெழுத்தாக எழுதிப் பார்க்க வேண்டுமாம். அபூர்ஷவ ராகங்கள், செல்லாத செய்திகள் வாழ்வின் தீராத பக்கங்கள், தீ நாக்கு உள்ளிட்ட கட்டுரைகளும் அருமை. நூலாசிரியர் நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர் என்பதால் அந்தப் பகுதிகளில் இன்றளவும் உள்ள சொல் வழக்குகளுக்கும் குறைவில்லை. வாசிக்கப்பட வேண்டிய நூல். நன்றி: தினமணி, 7/4/2014

Leave a Reply

Your email address will not be published.