வெற்றி வெளிச்சம்

வெற்றி வெளிச்சம், இயகோகா சுப்பிரமணியம், விகடன் பிரசுரம், சென்னை, பக். 176,விலை 95ரூ.

இந்நூலாசிரியர் இயகோகோ சுப்பிரமணியம், கோவையில் பிரபலமான தொழிலதிபர். கோவையிலிருந்து வெளிவரும் நமது நம்பிக்கை மாத இதழில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட சூத்திரம் கிடையாது. மேற்கத்திய நிர்வாக முறையும் உயர்கல்வியும் மட்டுமே தொழில்துறை வளர்ச்சிக்குப் போதுமானதல்ல. நமது பண்பாட்டின் அடிப்படையில் தனித்துவடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியை நிரந்தரமாக்க முடியும் என்பன போன்ற கருத்துகளைத் தனது அனுபவங்களூடாக விளக்குகிறார். உயர் குணங்களே வெற்றியை அருகில் கொண்டு வரும் என்கிறார். விருந்தோம்பலால் உயர்ந்த மனிதர்களின் கதைகளை அதற்கு உதாரணமாகக் காட்டுகிறார். கட்டுப்பாடற்ற வாழ்க்கை இலக்கை எட்டாது என்றும், வெற்றியாளர்கள் பலரும் வானிலிருந்து குதித்தவர்களல்ல, நம்மைப் போன்ற சாமானியர்கள்தான் என்றும், கோடீஸ்வரராவது மட்டுமே சிகரத்தை எட்டுவதல்ல, அவரவர் துறையில் ஒவ்வொருவரும் பெறும் வெற்றியே சமுதாயத்தையும் தேசத்தையும் வாழ வைக்கிறது என்றும் கூறுகிறார். வழக்கமான தன்னம்பிக்கை நூல்கள் போலல்லாமல், நூலாசிரியர் தனது 17 ஆண்டுகால நிறுவன அனுபவங்களைப் பிழிந்து சாறாகக் கொடுத்திருப்பதும் பாரம்பரியக் கண்ணோட்டத்துடன் எழுதியிருப்பதும்தான் இந்நூலின் தனிச்சிறப்புகள். வித்தியாசமான சிந்தனைகளை மனதில் விதைக்கும் அற்புதமான நூல் இது. நன்றி: தினமணி, 7/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *