காற்றின் பாடல்
காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. காற்றில் கரையாத பாடல் காற்று அடித்துக்கொண்டு போக, காலப்போக்கில் சருகுகள் மட்கி, உள்ளிருந்து அரிக்கும் என்றும் மரிக்காத ஓர்மைகள் இவை. வேட்டி மடிப்பிலிருந்து இவை விபூதியை எடுத்து எதிர்வந்த அம்மாவிடம் கொடுத்தேன். எப்பொழுதும் அம்மா, முருகா என்றபடி திருநீறு பூசிக் கொள்வாள். அதையும் அன்று சொன்னாளா இல்லையா? எதுவும் நினைவில்லை. சொல்லி இருக்கலாம். அவள் வாய் திறந்து சொல்கிற ஒன்றிரண்டு அபூர்வ வார்த்தைகளில் அதுவும் ஒன்று. மிச்சமெல்லாம் சொல்லாதவை. […]
Read more