கலியின் கதை
கலியின் கதை, வயா பைபாஸ், சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 195ரூ.
சாமானிய மனிதன் கிஷோர் பாபுவைப் பற்றிய கதை. பைபாஸ் ஆபரேஷனுக்குப் பிறகு அவர் உள்மன உலகிற்குச் சென்று சிக்கல்களில் சிக்கிப் போராடியவாறு கல்கத்தா நகரின் வீதிகளில் சுற்றி வருகையில் மூன்று விதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவை இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பைபாஸ் (இணை வழிப்பாதை) என்று சொல் இந்நாவலின் கரு. இன்றைய காலக்கட்டத்தில் யுக தர்மம் புறக்கணிக்கப்பட்டு, அதன் அருகாமையிலேயே வசதியான கிளை வழிகள் போடப்படுகின்றன. அடிப்படையாயுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எந்தந்த பொருள்களை அவர்கள் இதுவரை பைபாஸ் செய்து வைத்திருந்தார்களோ அவற்றை நோக்கியே கடைசியில் அவர்களைச் செல்லவைக்கிறது. சாகித்திய அகாதெமி விருது பெற்ற இந்த இந்தி நாவலை எழுதியவர் அல்கா ஸராவகி. தமிழுக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார் பா. பாலதிரிபுரசுந்தரி. நன்றி: தினத்தந்தி, 20/7/2014.
—-
சிவப்புச் சீதனம், முரண்களரி படைப்பகம், சென்னை, விலை 80ரூ.
நூலாசிரியர் நாஞ்சில் யோமாசேகர். சமூக அவலங்களை கண்டு மனங்கொந்தளிப்பதுடன், தன் கவிதை வரிகள் மூலம் சமூக அவலங்களையும் சீர்கேடுகளையும் சாடியுள்ளார். ஒவ்வொரு கவிதைகளிலும் நாட்டுக்கு சுட்டிக்காட்ட வேண்டியதை சுட்டிக்காட்டியும், குட்டிக்காட்ட வேண்டியதை குட்டிக்காட்டியும் உள்ளார். நன்றி: தினத்தந்தி, 20/7/2014.