விண்ணும் மண்ணும்

விண்ணும் மண்ணும்,  மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு, முரண்களரி படைப்பகம், பக்.128, விலை ரூ.150. இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையும், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவும் எழுதிய கட்டுரைகள் மற்றும் மயில்சாமி அண்ணாதுரையின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு இந்நூல். உலகில் பல நாடுகள் நிலா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோதிலும், நிலாவில் தண்ணீர் உள்ளது என்பதைக் கண்டறிந்து சாதனை படைத்தது சந்திரயான் -1. அது கண்டறிந்ததை உறுதிப்படுத்த மேற்கொண்ட அடுத்த பயணம்தான் சந்திரயான் -2. அதன் பயணத்தின் இறுதியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. இவற்றை […]

Read more

வசப்படாத வார்த்தைகளுடன்

வசப்படாத வார்த்தைகளுடன், கா. அமீர்ஜான், முரண்களரி படைப்பகம், விலை 100ரூ. உள்வெளிக் கவிதைகள் உள்ளிருந்து புறமும், புறமிருந்து உள்ளுமாய் வாழ்க்கையை விசாரணை செய்யும் கவிதைகளை ஐம்பதாண்டுகளாக எழுதிவரும் கவிஞர் கா. அமீர்ஜானின் முதல் கவிதை நூல் இவ்வளவு காலங்கடந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. ‘அன்பென்று எதனையும் சொல்…’ என்ற முதல் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும், ‘என் பிள்ளைகளின் நிமித்தம் எழுதப்படாத நாட்குறிப்பாய் நானும்..’ என்று கடைசிக் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும் மட்டுமில்லாமல், தொகுப்பு முழுவதுமான கவிதைகளில் உள்ளும் வெளியுமாய் தன்னையே நிறுத்திப் பார்த்து எழுதியுள்ளார் கா. […]

Read more

கலியின் கதை

கலியின் கதை, வயா பைபாஸ், சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 195ரூ. சாமானிய மனிதன் கிஷோர் பாபுவைப் பற்றிய கதை. பைபாஸ் ஆபரேஷனுக்குப் பிறகு அவர் உள்மன உலகிற்குச் சென்று சிக்கல்களில் சிக்கிப் போராடியவாறு கல்கத்தா நகரின் வீதிகளில் சுற்றி வருகையில் மூன்று விதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவை இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பைபாஸ் (இணை வழிப்பாதை) என்று சொல் இந்நாவலின் கரு. இன்றைய காலக்கட்டத்தில் யுக தர்மம் புறக்கணிக்கப்பட்டு, அதன் அருகாமையிலேயே வசதியான கிளை வழிகள் போடப்படுகின்றன. அடிப்படையாயுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எந்தந்த […]

Read more

ஆக்கமும் பெண்ணாலே

ஆக்கமும் பெண்ணாலே (பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்), ஏ. இராஜலட்சுமி, முரண்களரி படைப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 58, பக்.144, விலை 100ரூ. காலம் காலமாக சமூகத் தளைகளால் கட்டுண்ட பெண்கள், இலக்கிய மரபுகளை மீறி தம் உணர்வுகளைச் சுதந்திரமாகப் படைப்பிலக்கியத்தில் வெளியிட்டுள்ளனர். அதற்கு பெண் புலவர்களின் பாடல்களே சான்றாகத் திகழ்வதை சான்றுகளோடு எடுத்தக் காட்டியுள்ளார் ஆய்வாளர். புறப்பாடல்களைவிட அகப்பாடல்களை அதிகம் பாடியுள்ள பெண் புலவர்கள் ஆண்களை மையப்படுத்தியே பாடியுள்ளனர் என்றும், பெண் புலவர்கள் பாடிய புறப்பாடல்கள் […]

Read more