வசப்படாத வார்த்தைகளுடன்
வசப்படாத வார்த்தைகளுடன், கா. அமீர்ஜான், முரண்களரி படைப்பகம், விலை 100ரூ.
உள்வெளிக் கவிதைகள்
உள்ளிருந்து புறமும், புறமிருந்து உள்ளுமாய் வாழ்க்கையை விசாரணை செய்யும் கவிதைகளை ஐம்பதாண்டுகளாக எழுதிவரும் கவிஞர் கா. அமீர்ஜானின் முதல் கவிதை நூல் இவ்வளவு காலங்கடந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறது.
‘அன்பென்று எதனையும் சொல்…’ என்ற முதல் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும், ‘என் பிள்ளைகளின் நிமித்தம் எழுதப்படாத நாட்குறிப்பாய் நானும்..’ என்று கடைசிக் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும் மட்டுமில்லாமல், தொகுப்பு முழுவதுமான கவிதைகளில் உள்ளும் வெளியுமாய் தன்னையே நிறுத்திப் பார்த்து எழுதியுள்ளார் கா. அமீர்ஜான்.
படிமங்களாய் நீளும் கவிதைகளில் அழகியலும் அரசியலும் சேர்ந்தே பயணிக்கும் அழகை அமீர்ஜானின் கவிதைகளில் அடையாளம் காண முடிகிறது. செறிந்த வார்த்தைகளால் சுருக்கென முடிவடைந்து, மேலும் நாம் யோசிக்க இடமளிக்கும் கவிதைகள்.
-மு.மு.
நன்றி: தி இந்து, 27/8/016.