மௌனத்தின் பிளிறல்
மௌனத்தின் பிளிறல், புதிய மாதவி, எழுத்து.
புதிய மாதவி திருநெல்வேலிக்காரர் என்றாலும் தற்போது மும்பைவாசி. பன்னாட்டு வங்கிப் பணிக்குப் பின் விருப்ப ஓய்வில் விருப்பம் போல் கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், இலக்கிய விமர்சனம், மொழியாக்கம் என எழுதி வருகிறார்.
சாகித்ய அகாடெமி, மும்பைத் தமிழ்ச்சங்கம், பத்திரிகை, இலக்கிய மேடை, கருத்தரங்கு, எழுத்தாளர் சந்திப்பு, பல்கலைக்கழகம், மண்டலம் என்று பல தளங்களில் தன் இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். பாரீஸ், இலங்கை என்று பெண்களின் சந்திப்பிலும் கலந்து வருகிறார்.
‘மௌனத்தின் பிளிறல்’ இவரது புதிய கவிதைத் தொகுதி. இதனை ‘எழுத்து’ 2015-ல் வெளியீட்டிற்கென்று தேர்ந்தெடுத்து வெளியிட்டது சிறப்புக்குரியது. இதுவும் பெண்ணியம் பேசுகிறது என்பதை விட இதனைப் ‘பெண்ணியத்தின் பிளிறல்’ என்றே குறிப்பிடலாம்.
அதிகார வெளியினை ஊடறுக்கம் பெண்குரலில் இவரது ஓர் அங்கமாகிறது. “பெண்ணியச் செய்றபாட்டாளரை நாம் இனி சமூக செயற்பாட்டாளராக அடையாளம் காணப் பழக வேண்டும்” என்பது இவரது கூற்றாகும். இந்திரன் இவரது கவிதைகளை “பால்பகா உயர்திணைக் கவிதைகள்” என்பார்.
எரிமலைப் பிரதேசங்கள்
காலடியில் இருந்தாலும் குளிர்வதில்லை
அப்படித்தான் இந்த
வெளிச்சங்களுக்கு நடுவில்
இலக்கிய பூமியில் நானும்
என் கவிதைகளும்
என்பார் மாதவி. ஆம் புதிய மாதவிதான்.
நன்றி: காவ்யா, 2016.