கவிதை வானம்
கவிதை வானம், முனைவர் தி. நெல்லையப்பன், மணிபாரதி பதிப்பகம், விலை 180ரூ, 150ரூ.
நெல்லையப்பனின் கவிதை வானமும் அம்மாதான் ஆசிரியரும்
முனைவர் நெல்லையப்பன் நெல்லைக்காரர் என்றாலும் சிதம்பரம்வாசி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி இயக்கத் தமிழ்த்துணைப் பேராசிரியர். எனினும் எழுத்திலும் பேச்சிலும் இனிய அண்மையர். எட்டு நூல்களின் ஆசிரியர்.
கண்ணில் தெரியும் வானம் கைகளில் வருமா? வரும். கவிஞர்களுக்கு வரும். கவிதைகள் போலவே விதைகள் மண்ணில் விழுந்தாலும் விண்ணை நோக்கியே வாழும் – வளரும் என்பதை இவரது கவிதைகள் நிரூபிப்பன.
“நாற்றுகள் தான் வைக்கோல்
ஆகும்வரை வாழ்க்கை”
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ‘அம்மாதான் ஆசிரியர்’ சிறுவர் பாடல்களின் தொகுதி.
இவர் தாயோடு தாய் மொழியையும் பெருமை படுத்திட ‘தாய்மொழி செம்மொழி பயின்றிடுவோம்’ என்று குழந்தைகளுக்கு கூறுவது அவசியமும் அரசியலும்கூடத்தான்.
தாமிரபரணிக்கார்களுக்கு தமிழ் ஒரு வரம். அகத்தியர் முதல் பாரதி வரை கவிதைகளை வளர்த்தனர். நெல்லையப்பர்கள் கவிதை எழுதுவது விந்தையன்று.
நன்றி: காவ்யா, 2016.