தொல்தமிழியச் சிந்து நாகரிகம்
தொல்தமிழியச் சிந்து நாகரிகம், பி. இராமநாதன், தமிழ்மண், விலை 125ரூ, 90ரூ.
தொல்தமிழியச் சிந்து நாகரிகமும் பன்னாட்டு அறிஞர்கள் பார்வையில் தமிழும் தமிழரும்
இவ்விரு நூல்களும் ‘தமிழ்மண்’ணில் விளைந்தவை. இவ்விரண்டும் முறையே 2012 இலும், 2014இலும் வெளிவந்தவை. பி. இராமநாதன் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்.
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வழிநிலை ஆய்வறிஞர். வரலாற்றுத் துறையிலும் ஆழங்கால்பட்டவர். தமிழிய ஆய்வுப் புலங்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருபவர். எக்கருத்தையும் உரிய ஆதாரங்களுடன் நடுவுநிலையில் அறிவுலகத்தின் முன்வைப்பவர்.
மாந்த இனத்தின் தொல் வரலாறு – சிந்து நாகரிக அகழ்வாய்வுகள் நகரமைப்பு – கட்டடக்கலை – வீடமைப்பு – சிந்து நாகரிகத்துக்கும் எலாம் சுமெரிய எகிப்து முதலிய நாகரிகங்களுக்கும் உள்ள தொடர்பு – செய்திகள் சிந்து நாகரிகம் நூலில் உள்ளன.
தமிழின் தொன்மை முன்மை தென்மை, தமிழிய மொழிகளின் தொன்மை – தொல் தமிழிய மொழி பேசுநர் தெற்கிலிருந்து வடக்காகப் பரவினர் – தமிழிய மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் ஆன உறவுகள் போன்றவற்றை இந்நூல் விவரிக்கும்.
நன்றி: காவ்யா, 2016.