உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழனிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை, காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை நேர மெல்லிய மழையில் நனைவதற்கு இணையானது. பழனிபாரதியின் இந்த கவிதை தொகுப்பும் அதுபோன்றதே. தொகுப்பு முழுக்க காதல் கவிதைகள் மட்டுமே இருந்தாலும் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த மின்மினிப் பூச்சி, நம்மை அறியாமல் விரல் இடுக்குகளில் இருந்து நழுவுவதைப்போல், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக அபூர்வா, உயிர்த்துளை, உன்னதம், உச்சிப்பூக்கள், இரவு, அதன்பிறகு, […]

Read more

ஓவியமாய் ஒரு பெண்

ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, […]

Read more