ஓவியமாய் ஒரு பெண்
ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ.
பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, ஐம்பத்தெட்டை தொடப்போகும் தன் கணவனுக்கும் அப்படியான விபரீதம் நேர்ந்து விடுமோ என்று கலங்கித் தவிக்கிற மனைவி எடுக்கும் தெய்வீக முயற்சியை சிலிர்ப்புடன் சொல்கிறது பெருமாளே காப்பாத்து சிறுகதை. கதைகள் ஒவ்வொன்றுமே எங்கோ யாருக்கோ நடந்ததுபோல் அத்தனை இயல்பு. கேமரா கலைஞனின் பேனாவும், சாட்சிப் பதிவில் ப்ளாஷ் அடித்திருக்கிறது என்பது பளிச்சிட்ட நிஜம்.
—-
ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும், வீ. செந்தில்குமார், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளோடு, மேலோரின் மேற்கோள்களும் தொகுக்கப்பட்ட இந்நூல், மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்.
—-
தித்திக்கும் தேன் தமிழ் இலக்கியம், செ. ஞானன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ.
34 இலக்கிய கட்டுரைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும் அடங்கியுள்ளது சுவையான கதை. நன்றி: தினத்தந்தி, 16/1/2014. ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, ஐம்பத்தெட்டை தொடப்போகும் தன் கணவனுக்கும் அப்படியான விபரீதம் நேர்ந்து விடுமோ என்று கலங்கித் தவிக்கிற மனைவி எடுக்கும் தெய்வீக முயற்சியை சிலிர்ப்புடன் சொல்கிறது பெருமாளே காப்பாத்து சிறுகதை. கதைகள் ஒவ்வொன்றுமே எங்கோ யாருக்கோ நடந்ததுபோல் அத்தனை இயல்பு. கேமரா கலைஞனின் பேனாவும், சாட்சிப் பதிவில் ப்ளாஷ் அடித்திருக்கிறது என்பது பளிச்சிட்ட நிஜம். ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும், வீ. செந்தில்குமார், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளோடு, மேலோரின் மேற்கோள்களும் தொகுக்கப்பட்ட இந்நூல், மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். தித்திக்கும் தேன் தமிழ் இலக்கியம், செ. ஞானன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. 34 இலக்கிய கட்டுரைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும் அடங்கியுள்ளது சுவையான கதை. நன்றி: தினத்தந்தி, 16/1/2014.