போர்களும் தொலைந்து போன மனிதமும்

போர்களும் தொலைந்து போன மனிதமும், தஞ்சை செல்வன், மணிமேகலைப் பிரசுரம், விலை 190ரூ.

உலகின் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த எழுத்தாளர் தஞ்சை செல்வன், தன் பரந்த அனுபவத்தின் காரணமாக 416 பக்கங்கள் கொண்ட இந்த நெடிய நாவலை படைத்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த போர்கள் பற்றியும், தமிழ் ஈழத்தில் நடந்த போர் பற்றியும் பல ஆச்சரியமான உருக்கமான தகவல்களை இந்த நாவலில் பதிவுசெய்துள்ளார். கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. ஆசிரியரின் அழகான தமிழ்நடை இந்த பெரிய நாவலை விறுவிறுப்புடன் நடத்திச் செல்கிறது. “கடந்த 3500 ஆண்டுகால மனித வரலாற்றை எடுத்துக்கொண்டு, அதில் மனித சமுதாயம் சண்டை இல்லாமல் வாழ்ந்த நாட்களைக் கணக்கிட்டால், வெறும் 230 ஆண்டுகள்தான் மனித சமுதாயம் சமாதானமாக வாழ்ந்திருக்கிறது’ என்று கூறுகிறார் ஆசிரியர். போரின் கொடுமையை அதனால் மக்களுக்கு ஏற்பட்ட வலியை உணர்த்தும் சிறந்த நாவல். நன்றி: தினத்தந்தி, 9/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *