ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தரராஜன், திருமகள் நிலையம், பக். 280, விலை 175ரூ. இந்நாவல் படிக்கத் துவங்கியது முதல் முடிக்கும் வரை தொடர்ந்து படிக்கும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது. மகாதேவபுரம், மழையின்றி, தண்ணீர் இன்றித் தவித்தபோது, தாசி கமலாம்பாள் அங்கு வந்து, அவ்வூர் நடராஜர் சன்னிதியில் நடனமாடி, மழையை வரவழைத்தாள் என்ற செய்தியுடன் நாவல் தொடங்குகிறது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஊஞ்சல் பத்திரிகை ஆசிரியர் அமிர்தலிங்கம், பிரபாகர் என்ற செய்தி சேகரிப்பவரை அந்த ஊருக்கு அனுப்புகிறார்; அவன், அஸ்வதி என்ற பெண்ணுடன் மகாதேவபுரம் சென்று உண்மையை […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், விலை 175ரூ. சோழ மண்டலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்ட சரித்திரச் சிறப்பு வாய்ந்த மகாதேவபுரத்தை கதைக்களனாக கொண்டு படைக்கப்பட்ட பரபரப்பான மர்ம நாவல். ‘ஆனந்த தாண்டவம்’ என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிறபடியால் அப்படி ஒரு பெயரா இல்லை, அதைப் பார்ப்பவருக்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்பது விவாதத்துக்குரியது மட்டுமல்ல, பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன. குறிப்பாக […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், கே. குமரன், கே. ட்ரீம் வேர்ல்டு, சென்னை 83, பக். 132, விலை 250ரூ. 23 வயதே நிறைவடைந்த மாற்றுத்திறனாளியான இந்த நூலாசிரியர் குமரன், தனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களையும், தன்னுடைய இப்போதைய நிலைமையையும், இனிமேல் தான் செய்யவிரும்புவதையும் சுயசரிதை நூலாக வெளிக்கொணர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நூலின் தலைப்புக்கு ஏற்றவாறு உடல்ரீதியாக தான் அனுபவித்து வரும் வலிகைளை புறந்தள்ளிவிட்டு, தனது ஆசைகளையும், விருப்பங்களையும் எளிய தமிழில் பதிவு செய்திருக்கிறார். மூளை, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நூலாசிரியர், ஐந்தாம் வகுப்பு வரை […]

Read more

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில்

ஊர்புறத்தே ஓர் ஓலைக் குடிசையில், செ.மு. குபேந்திரன், கவிநிலவன் பதிப்பகம், தருமபுரி, பக். 80, விலை 40ரூ. கவிதைகளுக்குள் ஒரு புன்னகையை, ஒரு பூவை, ஒரு காதலை, ஒரு நட்பை, ஒரு கிராமத்தை, ஒரு பூகம்பத்தை ஒளித்து வைக்க முடியும் என்பதை உணர்த்தும் ஓர் எளிய கவிதைத் தொகுப்பு. தன் கிராமத்தின் சொர்க்கத்தைச் சொல்லி பட்டணத்தின் பவிசைச் சாடுவதும், தாய்மையின் அருமையை மனதில் பதித்துவிட்டுப் போவதும், சாதிக்கப் பிறந்தவனிடம் சாதியைக் கேட்டு தடைக்கல்லாய் இருக்கும் சமூக அவலத்திற்கு சவுக்கடி கொடுப்பதும் ஊர் புறத்தே உள்ள […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ. மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர். இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக […]

Read more