ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது
ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது, வி.செ. இம்மானியேல், விலை 150ரூ.
ஜெபம் என்றால் என்ன? ஜெபம் அவசியம்தானா? ஜெபம் என்னவெல்லாம் செய்யும்? யாரை நோக்கி யார் வழியாக ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கும் நூல். கிறிஸ்தவ மக்களுக்கு சிறந்த வழிகாட்டி. நன்றி: தினத்தந்தி, 9/3/2016.
—-
பாரதிதாசன் தமிழ் முழக்கம், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலை 25ரூ.
“தமிழுக்கு வாழ்வதே வாழ்வாகும்” என்று பாடும் அளவுக்கு ஆழமாகச் சென்றவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரது நூல்களிலிருந்து தமிழ்மொழி அதன் தன்மை, சிறப்பு – பண்பு பற்றிய சிறந்த பகுதிகளை தொகுத்து அளித்துள்ளார் முல்லை மு. பழநியப்பன். நன்றி: தினத்தந்தி, 9/3/2016.
—-
வீடு கட்டுவது இனி வெகு சுலபம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ.
“வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப் பார்” என்பது பழமொழி. அதன்படி ஒரு வீட்டைக் கட்டும்போது பலவகையான பிரச்சினைகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். ஒரு வீட்டை எப்படிக் கட்ட வேண்டும்? என்பதை இந்த நூலில் என்ஜினீயர் கே. தங்கவேல் எளிமையாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளார். வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த நூல் நிச்சயம் நல்ல வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் அமையும். நன்றி: தினத்தந்தி, 9/3/2016.