தமிழ் மக்கள் வரலாறு இக்காலம்
தமிழ் மக்கள் வரலாறு இக்காலம், தமிழ்க்கோட்டம், விலை 140ரூ. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாற்றை இதுவரை 8 புத்தகங்களாக எழுதியுள்ளார். கடைசிப்பகுதியான 9வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. காலமாறுபாட்டால் தமிழர்களின் வாழ்விலும், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை இதில் விவரிக்கிறார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருப்பது சாதிப்பிரிவினையே என்று கூறுகிறார். “இன்றைக்கும் தன்னை வழி நடத்தக்கூடிய தமிழனை சினிமாத் துறையிலேயே தமிழன் தேடுகிறான்” என்று சுட்டிக்காட்டுகிறார். தமிழரிடம் காணப்படும் குறைபாடுகளை, குட்டவும் செய்கிறார், தன் மோதிரக் கையால்! […]
Read more