கவிதை ஓர் ஆராதனை
கவிதை ஓர் ஆராதனை, கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 176, விலை 125ரூ.
கவிதை மனிதனை ஒழுங்கானவனாக்குகிறது. அழகனாக்குகிறது. கவிதை அழகை ஆராதிக்கிறது. அதாவது ஆண்டவனை ஆராதிக்கிறது. இப்படி மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆராதனை செய்யும் கவிதைகளின் தொகுப்பு கவிக்கோ வரிகளில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.
—-
டாக்டர் போத்தியின் கவிதைகள், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ.
கால்நடை மருத்தவரான போத்தி, பல்வேறு காலங்களில் தமிழரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய மரபுக்கவிதைகளின் தொகுப்பு இந்நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.