சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள்
சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள், முனைவர் மா. அமுதா, காவ்யா, விலை 320ரூ.
இந்நூல் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூல். கணவன் – மனைவியிடையே நிகழும் அன்பு வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது அக இலக்கியங்கள். இவ்விருவர்களிடையே உண்டாகும் சிறு சிறு உணர்வு மோதல்களைக் களைந்து இணைத்து வைக்க வருபவர்கள் வாயில்கள்’ தூதுவர்களான இவர்கள் உறவின் உன்னதத்தை எடுத்துரைத்து இருவரையும் இணைத்து வைக்கவே முற்படுவர். உளச் சிக்கல்களை தீர்த்திட உதவும் வாயில்களைப் பற்றிய உளவியல் ஆய்வை, மிகவும் சுவாரஸ்யமாக செய்திருக்கிறார் முனைவர் மா. அமுதா. நன்றி: தினத்தந்தி, 16/3/2016. தி.க.சி. என்றொரு மானுடன், சுஹைனா பதிப்பகம், விலை 150ரூ. மறைந்த எழுத்தாளர் தி.க.சி (தி.க. சிவசங்கரன்), பல சிறந்த நூல்கள் ஏழுதியவர். புரட்சிகரமான சிந்தனையாளர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், பணிகள் பற்றியும் வரலாற்று ஆய்வாளர் செ. திவான் எழுயி சிறந்த நூல் இது. நன்றி: தினத்தந்தி, 16/3/2016.