படக்கதையாக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாறு

படக்கதையாக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாறு, ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், 69/1, சாமியர்ஸ் ரோடு, சென்னை 28, விலை 72ரூ. தமிழ் இசையில் சிகரத்தைத் தொட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. பாரதரத்னா பட்டம் பெற்றவர். அவருடைய வாழ்க்கை வரலாறு படக்கதை ரூபத்தில் வெளிவந்துள்ளது. கர்நாடக சங்கீத ஆராய்ச்சியாளரும், அதுகுறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியவருமான லட்சுமி தேவ்நாத் முயற்சியால் இந்த நூல் வெளிவந்துள்ளது. அவர்க தையை ஆங்கிலத்தில் எழுத, அதை அழகிய தமிழில் பத்மா நாராயணன் மொழி பெயர்ததுள்ளார். படங்களை அழகாக வரைந்துள்ளவர் ஜி. சேகர்.   —-   […]

Read more

வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள், சபரீஷ் பாரதி, எஸ் 17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. தினத்தந்தி குடும்ப மலரில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பெருவாரியான வரவேற்பை பெற்றது சுப்ரஜா எழுதிய வெண்ணிற இரவுகள். ஒரு மர்ம பங்களா. அதை காலம் காலமாக அனுபவத்து அதே நேரம் அதன் ரகசியத்தை மூடி மறைக்கும் ஒரு செல்வாக்குள்ள குடும்பம். அந்தக் குடும்பத்தில் ஒருத்தியான நிலா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பங்களா வீட்டுக்கு வருவதில் தொடங்குகிறது. விறுவிறு கதைக்களம். […]

Read more

சங்க இலக்கியம் சில பார்வைகள்

சங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 600108, பக். 248, விலை 90ரூ. பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் ஆய்ந்து, அளந்து எழுதியுள்ள ஆராய்ச்சி நூலிது. தமிழகத்தின் தொன்மையும், சங்க காலச் சிறப்பும், பதிற்றுப்பத்தின் இலக்கிய வளமும், ஆற்றுப்படை இலக்கியத்திறனும், பாடாண் திணை, கதிரவன் ஒளி, அணி நயங்கள், வணிகத் தொன்மை, இசை மேன்மை, இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய பன்முகச் சிந்தனைகளில், ஆய்வுக் களம் அமைத்து நூலை எழுதியுள்ளார். […]

Read more

எனது பயணம்

எனது பயணம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது மாடி, உஷா பிரீத் காம்ப்ளெக்ஸ், 42, மாள்வியா நகர், போபால் 462003. விலை 150ரூ. இது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கைக் குறிப்பு அல்ல. சவால்கள் நிறைந்த அவரது நெடிய பயணத்தின் ஒரு திருப்பத்தில் இருந்து, அவர் கடந்துவந்த நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்த்து அசைபோடும் அற்புத உணர்ச்சிக் குவியல்கள். இதனை அவர் உள்ளது உள்ளபடி, சுவையாக கூறி இருக்கும் பாங்க வியக்க வைக்கிறது. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏற்படுத்திய தாக்கம், தாய், தந்தை உள்பட பலரது […]

Read more

நெஞ்சில் நிலைத்தவர்கள்

நெஞ்சில் நிலைத்தவர்கள், தேழமை வெளியீடு, 10, ஆறாவது தெரு, முதலாவது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-162-8.html அறஞிர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட புத்தகம். மறைமலையடிகளார், பன்மொழிப் புலவர், அப்பாத்துரையார், சிலம்புச் செல்வர், ம.பொ. சிவஞானம், திரு.வி.க. கல்கி, கண்ணதாசன், சேதுப்பிள்ளை உள்பட 70 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. ரவீந்திரநாத் தாகூர் உள்பட ஒருசிலர் மட்டும், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்ந்தவர்கள். இந்தப் புத்தகத்தின் […]

Read more

தப்புத்தாளங்கள்

தப்புத்தாளங்கள், இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-3.html ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒவ்வொரு சாதிசனத்திற்கும் இன்னொரு முகம் உண்டு. அந்த இன்னொரு முகம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. கிராமங்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி ஆதிக்க சாதிகளும் அதிகார சக்திகளும் அப்பாவி கிராமத்து மனிதர்களை தங்களின் சுயநலனுக்காக பலிகொடுத்த நிகழ்வுகள் பல இந்நூலில் பதிவாகியுள்ளன. ஒரு 12 வயதுச் சிறுவனுக்கு வயது வந்த அக்காள், தங்கைகளைத் திருமணம் […]

Read more

தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை)

தேரையர் வெண்பா (அகர முதல – விளக்கவுரை), கோக்கலை ஜே. ராஜன், மகராணி, சென்னை 101, பக். 496, விலை 250ரூ. தேரையர் என்பவர் தருமசௌமியர் என்பவருடைய மாணக்கர் என்றும் அகத்தியருடைய மாணக்கர் என்றும் கூறுவர். ஆனால் இவருடைய இயற்பெயர் சரியாகத் தெரியவில்லை. இவர் காலத்தில் நீங்காத தலைவலி கொண்ட ஓர் அரசனின் தலைவலியைப் போக்க, அவருடைய கபாலத்தைத் திறந்து பார்த்தபோது அங்கு ஒரு தேரை இருந்ததாம். உடனே ஒரு பாத்திரத்தில் நீரை வைத்ததும், தேரை அந்த நீரில் குதித்து நீங்கியதாம். பிறகு மூலிகையின் […]

Read more

நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி.மகாதேவா, மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது கட்டுரைகள் […]

Read more

அரங்கியல் நோக்கில் கபிலர் பாடல்களில் காணலாகும் கதை மாந்தர்கள்

பாரதியாரின் பாதையிலே, ம.பொ. சிவஞானம், பக்.136, ம.பொ.சி. பதிப்பகம், சென்னை – 41; விலை ரூ. 75 விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், மகாகவி பாரதியாருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அவர் நடத்திய ‘செங்கோல்’ வார இதழில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பல்வேறு கோணங்களில் பாரதியின் பாடல்களை ஆராய்ந்து தான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருப்பதாக, முன்னுரையில் ம.பொ.சி. குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதைகள் மட்டுமல்லாது, அவரது கதை, கட்டுரைகளிலிருந்தும் பல மேற்கோள்களை தனது ஆய்வுக் கட்டுரைகளில் சுட்டிக் […]

Read more
1 6 7 8