நெஞ்சில் நிலைத்தவர்கள்
நெஞ்சில் நிலைத்தவர்கள், தேழமை வெளியீடு, 10, ஆறாவது தெரு, முதலாவது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-162-8.html
அறஞிர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் கொண்ட புத்தகம். மறைமலையடிகளார், பன்மொழிப் புலவர், அப்பாத்துரையார், சிலம்புச் செல்வர், ம.பொ. சிவஞானம், திரு.வி.க. கல்கி, கண்ணதாசன், சேதுப்பிள்ளை உள்பட 70 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. ரவீந்திரநாத் தாகூர் உள்பட ஒருசிலர் மட்டும், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்ந்தவர்கள். இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் கரிகாலன், கட்டுரைகளை வெவ்வேறு ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். சிலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் முழுமையாக உள்ளன. சில கட்டுரைகளில், குறிப்பிட்ட தமிழறிஞர்களின் சிறப்புகள் மட்டும் வர்ணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரோஜா முத்தையா பற்றிய கட்டுரையில், நூல்களையும், பத்திரிகைகளையும் சேகரிப்பதில் அவர் நிகழ்த்திய அருஞ்சாதனை மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது.
—-
பேச்சு மரபும் உரை நெறியும், முனைவர் மு. முனியசாமி, காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 140ரூ.
தொல்காப்பியத்தை அடிப்படையாக வைத்து தமிழ் மொழியின் எழுத்து, சொல், பொருள் போன்றவற்றையும் தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளையும் ஆய்ந்து நூலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். அத்துடன் இலக்கணமும், பேச்சுவழக்கும் கூட நூலில் ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 30/10/2013.