தப்புத்தாளங்கள்
தப்புத்தாளங்கள், இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-3.html
ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒவ்வொரு சாதிசனத்திற்கும் இன்னொரு முகம் உண்டு. அந்த இன்னொரு முகம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. கிராமங்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி ஆதிக்க சாதிகளும் அதிகார சக்திகளும் அப்பாவி கிராமத்து மனிதர்களை தங்களின் சுயநலனுக்காக பலிகொடுத்த நிகழ்வுகள் பல இந்நூலில் பதிவாகியுள்ளன. ஒரு 12 வயதுச் சிறுவனுக்கு வயது வந்த அக்காள், தங்கைகளைத் திருமணம் செய்து வைத்து, அந்த அக்காளோடு சிறுவனின் தந்தை குடும்பம் நடத்திய வன்கொடுமை இதற்கு ஓர் உதாரணம். இப்படி கிராமங்கள் அணிந்திருக்கும் இன்னொரு முகத்தை தப்புத் தப்பான அந்த வழக்கத்தை நூல் முழுவதும் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல். நன்றி; குமுதம், 25/9/2013.
—-
முதுகுளத்தூர் சரித்திரமும் வீரர் வேலுச்சாமி நாடாரும், அன்வர் பாலசிங்கம், ஓயாத அலைகள், புதுக்காலனி தெரு, கலங்காத கண்டி, பூவாங்குடியிருப்பு (அஞ்சல்) திருநெல்வேலி மாவட்டம், பக். 116, விலை 100ரூ.
வரலாற்று ஆசிரியர்களும், முதுகுளத்தூர் கலவரத்தைப் பதிவு செய்தவர்களுக்கும் மாவீரர் வேலுச்சாமி நாடாரை தவிர்த்து விட்டுப் போனது ஏன்? என்ற கேள்வியோடு, வேலுச்சாமி நாடார் என்ற ஆளுமையின் சரித்திர நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தும் நூல். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோடு அவர் கொண்டிருந்த நெருங்கிய நட்பும், பின்னாட்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும், தியாகி இமானுவேல் சேகரனுடனான அவரது நட்பைக் கூறி மறைத்து கிடக்கும் முதுகுளத்தூர் சரித்திரத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சியும் இதில் நடந்திருக்கிறது. சாதியச் சூடு இன்றைக்கும் குறையாத முகவை பிரதேசத்தின் சாதிய அரசியலை, நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் அணுகி, அதன் நேர்மைத் தன்மையை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் ஆசிரியர். இதில் நெஞ்சுரத்துடன் போராடிய வீரர் வேலுச்சாமி நாடாரின் வீரத்தையும் காந்திய, தேசியப்பற்றையும் கவனமாக சீர்நோக்குகிறார் ஆசிரியர். நன்றி; குமுதம், 25/9/2013