வெண்ணிற இரவுகள்
வெண்ணிற இரவுகள், சபரீஷ் பாரதி, எஸ் 17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ.
தினத்தந்தி குடும்ப மலரில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பெருவாரியான வரவேற்பை பெற்றது சுப்ரஜா எழுதிய வெண்ணிற இரவுகள். ஒரு மர்ம பங்களா. அதை காலம் காலமாக அனுபவத்து அதே நேரம் அதன் ரகசியத்தை மூடி மறைக்கும் ஒரு செல்வாக்குள்ள குடும்பம். அந்தக் குடும்பத்தில் ஒருத்தியான நிலா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பங்களா வீட்டுக்கு வருவதில் தொடங்குகிறது. விறுவிறு கதைக்களம். கடைசிவரை சஸ்பென்சை காப்பாற்றியதில் தொடரை சுவாரசியமாக்கி இருக்கிறார் கதாசிரியர் சுப்ரஜா. காதலாய் உணரப்பட்ட நாயகி நிலா, கொஞ்சம் கொஞ்சமாய் திகில் அரசியாக மாறிப் போவது அந்த மர்ம பங்களாவின் கட்டாயம் என்பதை காட்சியில் உணர்த்தியிருக்கும்விதம் புத்திசாலித்தனம். கிளைமாக்சில் சுனாமியை கொண்டுவந்து சுப முடிவுக்கு வித்திட்டாலும் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடையாதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
—-
பலே ஞானசேகரன் ஒரு தடகள சாதனையாளர், பேராசிரியர் எஸ்.பி. அமிர்தலிங்கம், தாய்வீடு, 5/7ஜி, மெயின்ரோடு, திருக்கடையூர் 609311, நாகை மாவட்டம், விலை 50ரூ.
விளையாட்டு அழகானதும், அவசியமானதும், மனித உடலையும், வாழ்வையும் முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. ஓய்ந்து கிடக்கும் உடல் விளையாட்டின் மூலம் தூசுபடர்ந்த சிலையைப் போன்று இல்லாமல் துடித்தெழுந்து ஓடவும், ஆடவும் செய்வதுடன் கதிர்வனைப்போல் மாறிவிடுகிறது. மனமும் பக்குவப்படுகிறது. இதனை மையமாக வைத்து தடகள வீரர்களுக்கு ஊக்கம் தருவதற்காக அரிய புகைப்படங்களுடன் எழுதப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி.