தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்பிரமணியன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 99ரூ.

கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்தக் காலங்களில், தோன்றிய இலக்கியங்களின் வரலாறு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில், இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றைச் சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்கலாம். -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 9/2/2014.  

—-

 

அதிசயம் நிகழ்ந்த அற்புதத் திருக்கோயில்கள், சிவப்பிரியா, தென்னவர்த் திருநெறிப் பதிப்பகம், 79/16, சீலாநகர், முதல்தெரு, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 380ரூ.

இறைவனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற இடங்களில் அவனது ஆலயங்கள் அமைந்திருப்பதை நாம் காண இயலும். பல அதிசயங்கள் நிகழ்ந்த இறைவனால் நிகழ்த்தப்பட்ட  300 திருக்கோவில்களின் வரலாற்றைக் கூறுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *