அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள்

அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள், சிவப்பிரியா, தென்னவர் திருநெறிப் பதிப்பகம், புதுதில்லி, பக். 752, வி 380ரூ. நாட்டின் வட கோடி எல்லையில் உள்ள கயிலை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அமரநாதம் தொடங்கி தென் கோடியில் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதர் கோயில் வரை 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று வழிபட்டு அக்கோயில்களின் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சமயக் குரவர்கள் பாடியுள்ளதை (உ.ம்: ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும், தாயே ஆகி வளர்த்தனை போற்றி […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்பிரமணியன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 280, விலை 99ரூ. கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தந்தக் காலங்களில், தோன்றிய இலக்கியங்களின் வரலாறு எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில், இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற […]

Read more