படக்கதையாக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாறு

படக்கதையாக எம்.எஸ். சுப்புலட்சுமி வரலாறு, ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், 69/1, சாமியர்ஸ் ரோடு, சென்னை 28, விலை 72ரூ.

தமிழ் இசையில் சிகரத்தைத் தொட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. பாரதரத்னா பட்டம் பெற்றவர். அவருடைய வாழ்க்கை வரலாறு படக்கதை ரூபத்தில் வெளிவந்துள்ளது. கர்நாடக சங்கீத ஆராய்ச்சியாளரும், அதுகுறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியவருமான லட்சுமி தேவ்நாத் முயற்சியால் இந்த நூல் வெளிவந்துள்ளது. அவர்க தையை ஆங்கிலத்தில் எழுத, அதை அழகிய தமிழில் பத்மா நாராயணன் மொழி பெயர்ததுள்ளார். படங்களை அழகாக வரைந்துள்ளவர் ஜி. சேகர்.  

—-

 

அழகிய அந்தமான், ப. நரசிம்மன் மஞ்சு பதிப்பகம், 75 சாலை விநாயகர் சாலை, தருமபுரி 636701.

இந்தியாவின் அணிகலனாக விளங்கும் அந்தமான் தீவுகளுக்கு நான் சென்று வந்த அனுபவத்தை அழகிய அந்தமான் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார் பொறியாளர் ப. நரசிம்மன். எளிமையான, இயல்பான நடை, ஆர்வத்தோடு வாசிக்க வைக்கிறது. பொருத்தமான படங்களும் இடம்பெற்றுள்ளன. அந்தமானில் நிலவும் சுத்தம் பற்றி ஆசிரியர் கூறும்போது மனதுக்குள் ஆதங்கம் எழுகிறது. நன்றி: தினத்தந்தி.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *