நிஜங்களின் பதிவுகள்
நிஜங்களின் பதிவுகள், கே.ஜி.மகாதேவா, மித்ர ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ.
இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது கட்டுரைகள் வெவ்வேறு பொருள் பற்றி எழுதப்பட்டவை எனினும், படிப்பதற்கு சுவையாகவும், சிந்தனைக்கு விருந்தளிப்பவையாகவும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 29/5/2013.
—-
கம்பராமாயணம் ஓர் அறிமுகம், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 150ரூ.
கம்பராமாயணம் 6 காண்டங்கள் கொண்ட பெரும் இதிகாசம், அதன் முக்கிய பகுதிகளை உரைநடையில் எழுதி அறிமுகப்படுத்தியுள்ளார் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன். கம்பராமாயணத்துக்க பல தமிழறிஞர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். பல பதிப்பாளர்கள் பதிப்பித்து இருக்கிறார்கள். அப்போது சில புதிய பாட்டுகளை எழுதி, இடைச் செருகல்கள் செய்திருக்கிறார்கள். அவற்றையும் அடையாளம் கண்டு சுட்டிக்காட்டி இருக்கிறார் பேராசிரியர் ஞானசம்பந்தன். கம்பராமாயணத்தை அறிந்து கொள்ள சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி 29/5/13.