வணிகப் பொருளியல்

வணிகப் பொருளியல், கலியமூர்த்தி, தமிழ்நாடு சமூக மற்றும் பொருளியல் ஆய்வு நிறுவனம், சுடரொளி பதிப்பகம், சென்னை 106, பக். 456, விலை 150ரூ.

நாட்டின் அடிப்படைப் பொருளாதாரத்தை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். அதுவும், வணிகப் பொருளியலை தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும். பொருளாதாரமே நாட்டின் ஆதாரம் என்பது திறம்பட எடுத்துக் கூறப்பட்டுள்ளது. நூலாசிரியர் அனுபவமிக்க பொருளாதாரப் பேராசியர் என்பதால், ஒவ்வொரு விஷயத்தையும் பல்வேறு தலைப்புகளில் நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளார். வணிகப் பொருளியல் என்றால் என்ன? என்பதை விளக்குவதில் ஒவ்வொரு பொருளியல் அறிஞரும் எப்படி வேறுபடுகின்றனர்? என்பதை அவர்களது வாசகங்களாலேயே மேற்கோள்காட்டி விளக்கியுள்ளார். நிறுவனக் கோட்பாடு தேவை, தேவை முன்கணிப்பு, உற்பத்திக் காரணிகள், பகிர்வுக் கோட்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்வேறு விஷயங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் பொருளாதாரத்தைப் படித்துவிட்டு, தமிழில் படிக்கும்போது சிறிதும் சிரமம் தெரியாமல் இருக்க பல கருத்துகளும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்கள் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. தேவைக்குப் பொருளை ஏற்படுத்த ஆகும் செலவெல்லாம் உற்பத்திச் செலவு. பொருளுக்குத் தேவையை ஏற்படுத்த ஆகும் செலவெல்லாம் விற்பனைச் செலவு என்பது போன்ற பொருளாதாரப் பொன்மொழிகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் தொடக்க நிலைமுதல் தற்போதைய பங்குச் சந்தை நிலவரம் வரை அலசி ஆராயப்பட்டுள்ளது. வணிகப் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நூல் பெரிதும் உதவும். வணிகர்களுக்குத் தேவையான பல கருத்துகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமணி, 2/4/12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *