சிவாஜி வென்ற சினிமா ராஜ்யம்
சிவாஜி வென்ற சினிமா ராஜ்யம், கலைவித்தகர் ஆரூர் தாஸ், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 120ரூ.
பாசமலர், புதிய பறவை, உள்பட சிவாஜி கணேசனின் 28 படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர். அவர் எழுதிய சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் என்ற இந்தப் புத்தகத்தில், சிவாஜி பற்றிய பல அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. பல படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்ததால், புதிய பறவை படத்துக்கு வசனம் எழுத இயலாது என்று கூறிவிடுகிறார் ஆரூர் தாஸ். அவர் மனதை சிவாஜி எப்படி மாற்றினார் என்பதையும், 7 இரவுகள் விடிய விடிய அமர்ந்து வசனத்தை எழுதி முடித்ததையும் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் ஆரூர்தாஸ். இப்படி பல நிகழ்ச்சிகள். 1000 படங்களுக்கு வசனம் எழுதியவர் அல்லவா? புத்தகத்தை அருமையான நாவல் போல நவரசங்களுடன் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 27/3/13.
—-
விகடன் கல்வி மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, பக். 288, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-024-2.html
சென்னை போன்ற மாநகரப் பள்ளிகளில் மேற்படிப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கே கூட, அடுத்து நாம் என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்ற அடிப்படை விபரங்கள் தெரிவதில்லை. கிராமங்களில் இந்த நிலை இன்னும் மோசமானது. எவ்வளவோ தகவல் தொடர்பு சாதனங்கள் வந்தும்கூட, இதுகுறித்த வழிகாட்டுதல்கள் பெரும்பாலோருக்குக் கிட்டவில்லை என்பதே இதற்குக் காரணம். இக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக இந்நூல் வெளியாகியுள்ளது. மேற்படிப்பிற்காக பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், தொழில் படிப்பகள், மருத்துவப் படிப்புகள், பொறியியல் படிப்புகள் என்று உலகின் படிப்புகள் பரந்து கிடக்கின்றன. இவற்றில் எதை, எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது, தொழில் துறை படிப்புகளின் இன்றைய நிலை என்ன, எந்த வேலைக்கு எந்த படிப்பை படிக்க வேண்டும். வெளிநாட்டில் பட்டப் படிப்புகளுக்கான வாய்ப்புகளை அறிவது எப்படி? பொறியியல் படிப்பில் உள்ள பல்வேறு புதிய படிப்புகளின் பட்டியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் குறித்த விபரங்கள், படிப்பிற்கான கல்விக் கடன் பெறுவது எப்படி, TNPSC, UPSC, TRB, SET, TET, NEET போன்ற போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி உள்ளிட்ட பல விஷயங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இத்தருணத்தில் இந்நூல் வெளியாகியுள்ளது மாணவர்களும், பெற்றோர்களுக்கும் பயன் தரத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக் 29/5/13
