மோகினித் தீவு

மோகினித் தீவு, அமரர் கல்கி, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 25ரூ. எழுத்துல பிதாமகர் அமரர் கல்கி எழுதிய குறுநாவல் மோகினித் தீவு. கல்கியின் தனித்துவமான நடையழகில், மனித வாழ்வின் ஆதார உணர்வுகளான நகைச்சுவை, வீரம், மர்மம், திகில், காதல் ஆகியவை கொண்டு மிளிரும் என்ற நமது அறியாமை கலந்த எண்ணத்தை அவரின் மோகினித் தீவு குறுநாவல் தகர்த்து எறிகிறது. ஒரு தியேட்டர் படம் பார்க்கப்போன இரண்டு பால்ய நண்பர்கள், நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஜப்பானிய போரின்போது […]

Read more

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள்

திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள், முனைவர் எஸ். சந்திரா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 55ரூ. உள்நாடு, வெளிநாடு என்று பல கணித அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இந்நூலாசிரியர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு இவ்விரு துறைகளிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால், வள்ளுவன் கூறிய ஏதாவது ஒரு குறளுடன் ஒத்துப் போவதை அறியலாம். அந்த அளவிற்கு எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் திருக்குறளைப் படைத்திருக்கிறார் திருவள்ளுவர். அதை […]

Read more

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ. மகாபாரதத்தின் மகா புருஷரான கண்ணன் பற்றிய கதைகளை சுவாட தொகுத்துத் தந்துள்ளார் வேளுக்குடி கிருஷ்ணன். மாருதி வரைந்துள்ள வண்ணப் படங்கள், புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —-   இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம், ஆப்பிள் பள்ளிஷிங் இண்டர்நேஷனல், சென்னை, விலை 80ரூ. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்தி பச்சிலைகளுக்கு உண்டு. துளசி, வல்லாரை, கறிவேப்பிலை, நொச்சி இலை உள்பட 20 பச்சிலைகளின் மருத்துவ குணங்க9ளை […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர. பாலன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி, அது தொடர்பான இடங்களுக்கு நேரில் சென்று அனுபவ பூர்வமாக எழுதப்ட்ட ஒரு இலக்கியப் பயண நூலாகும். கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள குமுளி வனப்பகுதியில் பாழடைந்து கிடக்கும் கண்ணகி கோட்டத்தை தரிசித்து வரவேண்டும் என்ற ஆசையையும் இந்த நூல் ஏற்படுத்துகிறது. இது சிறந்த நூல். சிலப்பதிகாரத்தைப் படித்த உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —- குறள் கூறும் ஊழும் கூழும், கி. ராமசாமி, […]

Read more

அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்

அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள், மன்மதநாத் குப்தா, கி. இலக்குவன், அலைகள், பக். 560, விலை 320ரூ. இந்தியா சுதந்திரம் பெற, காந்திஜி அகிம்சை வழியில் போராடியபோது, அவர் முறைக்கு முற்றிலும் எதிரான வழியில் புரட்சியாளர்கள் பலரும் போராடினர். பகவத்சிங், சந்திரசேகர ஆசாத் போன்ற தீவிர புரட்சியாளர்கள் உறுப்பினராய் இருந்த அந்த அமைப்பு, இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் என்று, பிற்காலத்தில் பெயர் பெற்றது. ஆரம்ப காலத்திலிருந்தே காந்தியின் வழியில் நம்பிக்கை இழந்தவர் இந்நூலின் மூல ஆசிரியரான மன்மதநாத் குப்தா. அவரது, 13வது வயதிலேயே முதல் […]

Read more

கண்ணன் கழல்கள் பணிமினோ

கண்ணன் கழல்கள் பணிமினோ, எஸ். சுதர்சனம், ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா டிரஸ்ட், விலை 100ரூ. கண்ணனின் பாலலீலைகளை, ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் பார்வையில், எழுதி பல தகவல்களை மனதில் பதியவைக்கும்விதம் சிறப்பானது. ஆயர்பாடியில் யசோதை கண்ணனை பாலகனாக கண்டு மகிழ்ந்த அனுபவம், காலம் காலமாக போற்றப்படும் உண்மை. நந்தன், யசோதை பெற்ற, அந்த பாக்கியத்தை கண்ணனின் தந்தையான வசுதேவரும், தாய் தேவகியும் அடையவில்லை. யசோதை பெற்ற இன்பத்தை பெற இயலவில்லையே என்று புலம்புகிறாள் தேவகி. நந்தன் பெற்றனன், நல்வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே […]

Read more

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள், ஜே.எஸ். ஏப்ரகாம், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 60ரூ. மனோபாவத்தை மாற்றிக்கொண்டால், பிரச்னைகள் குறையும் என்பதை, மன இயல் முறையில் விளக்கும் நூல் இது. துன்பங்களை எதிர்கொண்டால், அதை இயல்பாக வெல்லலாம் என்ற, பல கருத்துகளும் இதில் உள்ளன. நன்றி: தினமலர், 13/4/2014.

Read more

சுதந்திர வேங்கை

சுதந்திர வேங்கை, கவுதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 312, விலை 220ரூ. பூலித்தேவனின், வீர வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள சரித்திர நாவல். மதுரையை ஆண்ட கடைசி நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாத நாயக்கரால், பூலித்தேவனின் வீரம் மெச்சப்படுகிறது. காலமாற்றம், ஆற்காட்டு நவாபுகளால் ஏற்படும் அரசிய்ல மாற்றம், ஆங்கிலேயர் கை ஓங்குதல், பாளையக்காரர்களின் எதிர் யுத்தம் மற்றும் வீழ்ச்சி எல்லாம் விரிவாகப் பேசப்படுகிறது இப்புதினத்தில். நவாப் மற்றும் ஆங்கிலேயர் சார்பில், நெல்லைச் சீமையில் வரி வசூலிப்பு தர்பார் நடத்தும் மருதநாயகம், பூலித்தேவனை அடக்கவோ, […]

Read more

சிற்பியின் படைப்புலகம்

சிற்பியின் படைப்புலகம், முனைவர் இரா. மோகன், முனைவர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 198,விலை 100ரூ. பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முக படைப்புகளை படம் பிடித்துக் காட்டும் பத்து முத்தான கட்டுரைகளே இந்த புத்தகம். பாரதிதாசன் போற்றிய படைப்பாளியான சிற்பியின் படைப்புத்திறனை தங்கள் ஆய்வு திறத்தாலும் படைத்து அளிக்கும் திறமையாலும், சொல் ஆற்றலாலும், நமக்க விருந்து படைக்கின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் படிப்போருக்கு இது சுவாரஸ்யம் தரும். சிற்பியின் பல புத்தகங்களை படித்த உணர்வு, இந்த ஒரு புத்தகத்தை படிக்கும்போது கிடைக்கிறது. -ஜிவிஆர். நன்றி: […]

Read more

ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம்

ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம், ஸ்ரீஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீ பாதங்களவர்கை ஸ்ரீமத் உத்தராதி மடாதீஸர், தொகுப்பாசிரியர் எல். லஷ்மி நரசிம்ஹன், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 150ரூ. பவிஷ்யோத்தர புராணம் திருப்பதிக்கு யுகக் கிரமமாக ரிஷபாசலம், அஞ்ஜனாசலம், சேஷசலம், வேங்கடாசலம் என்ற நான்கு பெயர்கள் வந்தன என்று சொல்கிறது. வராக புராணம் இன்னும் பதினான்கு பெயர்களைச் சொல்கிறது. இஷ்ட்டப்பட்டதையெல்லாம் கொடுப்பதால் அந்த பர்வதத்திற்கு சிந்தாமணி என்று பெயர். ஞானத்தைக் கொடுப்பதால் அது ஞானாசலம். எல்லா தீர்த்தங்களின் சன்னிதானத்தைக் கொண்டிருப்பதால் அது தீர்த்தாசலம். […]

Read more
1 4 5 6 7 8