ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், தொகுப்பு காந்திமதி கிருஷ்ணன், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 100ரூ. நம்பிக்கைதான் மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம். அது மட்டும் இருக்குமானால் அவனால் எல்லாக் கஷ்டங்களையும், எல்லாச் சூழ்நிலைகளையும் மிக மோசமானவற்றையும் ஊக்கத்தை இழந்துவிடாமல், மனமுடைந்து போகமல் எதிர்த்து நிற்க முடியும். அப்படிப்பட்டவன் கடைசிவரை ஆண்மையுடன் போரிடுவான். அமைதியான அசையாத மனமும் பிராணனும் உள்ள தன்மைக்கு சமதை என்று பொருள். பிராண இயக்கங்களான கோபம், அதீத உணர்ச்சி, செருக்கு, ஆசை முதலியவை மீது […]

Read more

தாய்

தாய், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 290ரூ. புகழ் பெற்ற ரஷிய நாவலான தாய் உரைக்கின்ற கருத்தாலும், உயிரோட்டமுள்ள பாத்திரப் படைப்புகளாலும், உணர்வுள்ள நடையாலும் உலகின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இதை எழுதிய மார்க்சிம் கார்க்கி, அழியாப் புகழ் பெற்றுவிட்டார். 127 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, கோடிக்கணக்கில் விற்பனையான புத்தகம் இது. குடிகாரக் கணவனிடம் அடிபட்டு, மிதிபட்டு அல்லற்பட்ட நிலாவ்னா, மகன் பேவலைத் திருத்தி, அவனை அறிவார்ந்த ஆற்றல் மிக்க புரட்சித் தலைவனாக உருவாக்கி, தன்னை புரட்சி இயக்கத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டவள். […]

Read more

உலகும் தமிழும்

உலகும் தமிழும், சவிதா பிரசுரம், தஞ்சாவூர், விலை 150ரூ. தமிழ் மொழி, தமிழின் சிறப்பு, தமிழர் பெருமை, தமிழர் பண்பாடு ஆகியவை பற்றி ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட நூல். மற்ற மொழிகளின் எழுத்துக்களோடு ஒப்பிட்டும், கல்வெட்டுச் சான்றுகளோடும் நிறுவியுள்ளதோடு, இன்றைய தமிழின் நிலையையும், தமிழ் மொழி மேம்படச் செய்ய வேண்டிய பணிகளையும் நூலாசிரியர் சி. பவுன்ராஜ் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/8/2014.   —- இன்னொரு கிரகத்திற்கு, வடிவம் பதிப்பகம், திருச்சி, விலை 300ரூ. அமெரிக்காவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த […]

Read more

இணைவோம்

இணைவோம், மு. காலங்கரையன், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 264, விலை 100ரூ. நூலாசிரியர் மாற்றுத் திறனாளிகளின் துயரங்களைக்கூட இருந்து அனுபவித்துள்ளதால், அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்நூலை சுவை குன்றாமல் ஓர் நாவலாக எழுதியுள்ளார். இந்நூலில் காணும் மூதுரைகள், முன்னோரின் கவிதை வரிகள், சிந்தனைச் சிதறல்கள், நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற அறிவின் திறத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். சான்றாக, சேர்ந்து வாழுகிறது மட்டும்தான், காதலுக்கு வெற்றின்னு இல்லை. நம்மள நேசிச்சவங்க நமக்குக் கிடைக்காவிட்டாலும், அவங்க சந்தோஷமா இருக்கிறதப பார்த்து சந்தோஷப்படுகிறதும், உண்மையான காதல்தான் என்ற வைர வரிகளைக் கூறலாம். நூலின் […]

Read more

மனசே மருந்து

மனசே மருந்து (மனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம்-ஹிப்னோதெரபி, டாக்டர் வேத மாலிகா, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை 17, பக். 240, விலை 150ரூ. நம் மனதுக்கும், உடல்நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதை உணர்த்தும் வகையில் உடல் நலத்துக்கு மனசே மருந்து என்கிறது இந்நூல். இயந்திரமயமாகிவிட்ட இன்றைய அவசர யுகத்தில், போதிய ஓய்வின்றி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து முடித்துவிட வேண்டும் என டென்ஷனாகிறோம். டென்ஷனைக் குறைக்க மாத்திரைகளை விழுங்குகிறோம். மனநோய்க்கு தொடர்ந்து தரப்படும் மருந்துகளே நரம்பு தளர்ச்சி போன்ற பல புதிய நோய்கள் […]

Read more

நீளும் கனவு

நீளும் கனவு, கவின்மலர், கயல்கவின் பதிப்பகம். அண்ணன் மனதில் மறைந்திருக்கும் வக்கிரம் நீளும் கனவு என்ற சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். எழுத்தாளர் கவின்மலர். பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகள் இவை. கயல் கவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் பல கதைகள் இருந்தாலும் அண்ணன், இரவில் கரையும் நிழல்கள் என்ற இரு சிறுகதைகள் என்னை மிகவும் பாதித்தவை. பெண்ணுடன் பிறக்கும், ஆண்களை அண்ணன், தம்பி என அழைக்கிறோம். அதேநேரத்தில் உடன் பிறவாத மூன்றாம் நபராக இருக்கும் ஒரு ஆணையும் அண்ணன் என அழைப்போம். […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ. தமிழகத்தின் பழம்பெரும் நாடகக் கம்பெனியான எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜில் பணியாற்றியவர் கலைமாமணி பி.ஆர். துரை. அவர் இந்த நூலில், தனது நாடக உலக அனுபவங்களை சுவை குன்றாமல் தொகுத்து அளித்துள்ளார். 18 தலைப்புகளில் இவரின் அறுபது ஆண்டு கால கலை உலக வாழ்க்கை அனுபவங்கள், பழம் பெரும் நாடக, திரையுலக நடிகர்களின் சுவையான அனுபவங்களையும் சேர்த்தே தாங்கியுள்ளது. 1957 முதல் 61 வரை பாய்ஸ் […]

Read more

பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்

பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள், இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 96, விலை 100ரூ. இசையே சிவன், சிவனே இசை என்ற சுந்தரர் வாக்குப்படி இசைஞானி சிவஞானி ஆகியிருக்கிறார். பாவை பாடிய வாயால் கோவை பாடுக என மாணிக்கவாசருக்கு சிவன் ஆணையிட்டதுபோல், பாவைப் பாடல்கள் பாடிய வாயால் திருப்பள்ளி எழுச்சியையும் பாடவைத்திருக்கிறார். பாவைப் பாடல்கள் 20, திருப்பள்ளி எழுச்சி 10 என்று இசைஞானி அருளியதை குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டிருப்பது பெருமை. பாவைப் பாடல்களில் பெண்களைத் துயில் எழுப்பி இறைவன் புகழ்பாடி அருள்பெற […]

Read more

தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள்

தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 65ரூ. கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து வெவ்வேறு சூழலில் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கணினியில் தமிழ் என்னும் கட்டுரை கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்குரிய முறைகள், உள்ளீடு செய்வதில் எழும் சிக்கல்கள் இவற்றை விளக்குகிறது. கணினியில் தமிழை உள்ளீடு செய்யப் பல இலவச இடை முகமென்பொருள்கள் வந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்த விரும்புவோருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மென்பொருளின் தனித்தன்மையையும் விரிவாக எடுத்துரைக்கிறது ஒரு கட்டுரை. வணிகநோக்கமின்றி  நிரல் குறிகளைப் […]

Read more

சினிமாவும் நானும்

சினிமாவும் நானும், இயக்குநர் மகேந்திரன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-220-9.html தமிழ் சினிமாவின் என்றுமே உதிராத பூ, இயக்குநர் மகேந்திரன். அவரது உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் ஆகிய இரண்டும் வருங்கால, நிகழ்கால இயக்குநர்களை வழிநடத்தும் கலைப் புத்தகங்கள். ஒரு கற்பனைக் கதையை யதார்த்த பாணியில் படம் ஆக்குவது என்ற மகேந்திரனின் விதைதான் இன்று பல்வேறு வெற்றிப் படங்களின் விருட்சமாக ஆகி இருக்கிறது. வசனத்தை மென்மையாக ஆக்கி காட்சிப்படுத்துதலை அதிகமாய் பயன்படுத்திய மகேந்திரனுள் எப்போதும் […]

Read more
1 3 4 5 6 7 8