அங்கீகாரம்
அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ. தமிழகத்தின் பழம்பெரும் நாடகக் கம்பெனியான எஸ்.வி. சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜில் பணியாற்றியவர் கலைமாமணி பி.ஆர். துரை. அவர் இந்த நூலில், தனது நாடக உலக அனுபவங்களை சுவை குன்றாமல் தொகுத்து அளித்துள்ளார். 18 தலைப்புகளில் இவரின் அறுபது ஆண்டு கால கலை உலக வாழ்க்கை அனுபவங்கள், பழம் பெரும் நாடக, திரையுலக நடிகர்களின் சுவையான அனுபவங்களையும் சேர்த்தே தாங்கியுள்ளது. 1957 முதல் 61 வரை பாய்ஸ் […]
Read more