தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள்
தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 65ரூ.
கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து வெவ்வேறு சூழலில் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கணினியில் தமிழ் என்னும் கட்டுரை கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்குரிய முறைகள், உள்ளீடு செய்வதில் எழும் சிக்கல்கள் இவற்றை விளக்குகிறது. கணினியில் தமிழை உள்ளீடு செய்யப் பல இலவச இடை முகமென்பொருள்கள் வந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்த விரும்புவோருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மென்பொருளின் தனித்தன்மையையும் விரிவாக எடுத்துரைக்கிறது ஒரு கட்டுரை. வணிகநோக்கமின்றி நிரல் குறிகளைப் பதிவிறக்கம் செய்தல், அவற்றை மதிப்பிடுதல் எதிர்காலத்தேவையை இளங்காட்டுதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டதாக நூலின் நான்காம் கட்டுரை அமைந்துள்ளது. தரவகம்(Corpus) என்னும் கட்டுரை மொழி ஆய்வு, அகாதி ஆக்கம், மென்பொருள் தயாரிப்பு, மொழி கற்க கற்பிக்க எனப் பல்வேறு பயன்பாட்டிற்கு உதவும் தரவகம் குறித்த கருத்துகளை விளக்குகிறது. மேலும், தமிழ் மொழிக்குப் பெருந்தரவகம் உருவாக்க வேண்டிய தேவையையும் இது முன்வைத்துள்ளது. கணினியின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்கும் இந்நூல் அதன் தலைப்போடு மிகப் பொருத்தம் உடையதாக அமைகிறது. எளிய நடையில் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை விளக்கும் விதத்தில் இந்நூலை நூலாசிரியர் அமைத்துள்ள பாங்கு பாராட்டத்தகுந்தது. -முனைவர் ந. ஆனந்தி. நன்றி: தி. இந்து, 4/6/14.
—–
மறக்கவே நினைக்கிறேன், மாரி செல்வராஜ், விகடன் பிரசுரம், பக். 286, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-229-5.html இந்த நூலில் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றி வேகமும் விறுவிறுப்பும் கலந்த நடையில் சொல்வோலியம் வரைந்துள்ளார். மாரி செல்வராஜ் சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். நன்றி: விகடன் பிரசுரம், 4/6/14.