நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், தமிழாய்வு மன்றம், விலை 100ரூ. நோக்கு நூல்கள் ஒரு மொழியின் மேம்பட்ட நிலையை விளக்குவனவாக அமைவன. அந்த வகையில், மரபும் புதுமையும் என்னும் இந்நூல் நிகண்டுகள் குறித்தும் கணினி வழி நூலடைவு உருவாக்கம் குறித்தும் பல தகவல்களை உள்ளடக்கி, மொழியின் பழமையையும் வளர்ந்துவரும் அறிவியல் யுகத்திற்கு ஈடுகொடுக்கும் புதுமையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்படாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நீரார் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகியவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் […]

Read more

தமிழ் மென்பொருள்கள்

தமிழ் மென்பொருள்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 125ரூ. அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்குவதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (font), குறியீட்டாக்கம் (Encoding), விசைப்பலகை (keybord), குறித்தும் இம்மூன்று அடிப்படைக் கூறுகளுக்கான ஒருங்குறி (Unicode) பங்களிப்பு குறித்தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் […]

Read more

தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள்

தமிழ்க் கணினியியல் பரிமாணங்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 65ரூ. கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து வெவ்வேறு சூழலில் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கணினியில் தமிழ் என்னும் கட்டுரை கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்குரிய முறைகள், உள்ளீடு செய்வதில் எழும் சிக்கல்கள் இவற்றை விளக்குகிறது. கணினியில் தமிழை உள்ளீடு செய்யப் பல இலவச இடை முகமென்பொருள்கள் வந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்த விரும்புவோருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மென்பொருளின் தனித்தன்மையையும் விரிவாக எடுத்துரைக்கிறது ஒரு கட்டுரை. வணிகநோக்கமின்றி  நிரல் குறிகளைப் […]

Read more