ஆலமரம்

ஆலமரம், விஜயலஷ்மி சுந்தராஜன், மணிமேகலைப் பிரசுரம், பக். 958, விலை 490ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-5.html இளைப்பார ஓர் ஆலமரம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்காக ஏங்கிக் கிடக்கும் கணிசமான வாசகர்களை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் திருப்திப்படுத்தும். ஆயிரம் பக்கங்களில் ஒரு நாவலைப் படிக்க யாருக்கு இப்போதெல்லாம் அவகாசம் இருக்கிறது ? என்ற கேள்வியை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் துணிவோடு படிக்கத் தொடங்கிவிட்டால் போதும். அன்று கடல் போல் சொத்துடன் ஒற்றையாக நின்ற அம்புஜம்! […]

Read more

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. சாதனையாளர்களின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றியாளர்களாகப் பரிணமிக்க முடியும். சாதனையாளர்கள் அவர்களின் வெற்றி இலக்கை அடைய எடுத்த முயற்சிகளையும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் படிப்பினைகளாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் சாதிக்க எத்தனை துறைகிளில் கவனம் செலுத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. விபத்து ஒன்றில் வாழ்க்கையின் விளிம்புக்குச் சென்று மீண்ட தன்னம்பிக்கையாளர் ரீவ்ஸ், விடுடக் கொடுப்பவர்கள் எதையும் இழப்பதில்லை என்று உணர்த்திய சு […]

Read more

கண்ணதாசனின் வனவாசம்

கண்ணதாசனின் வனவாசம், கண்ணதாசன் ஆடியோஸ், சென்னை, விலை 120ரூ. கவிஞர் கண்ணதாசன் அவருடைய சுயசரிதையை வனவாசம் என்ற பெயரில் எழுதினார். அந்த நூல் தமிழகத்தில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. காரணம், தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எழுதியதுதான். இப்போது அதை கண்ணதாசன் ஆடியோஸ் ஒலிவடிவில் டிவிடி-யாக வெளியிட்டுள்ளது. அதாவது கண்ணதாசன் எழுதியதை, அவருடைய மகன்களில் ஒருவரான அண்ணாதுரை கண்ணதாசன், கம்பீர குரலில் ஏற்ற இறக்கத்துடன் சங்கீதக் கச்சேரியைக் கேட்டு ரசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. முன்பு படித்து ரசித்தவர்கள், இப்போது […]

Read more

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை, மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி நடத்தினர். அவர்களை விரட்டி அடித்து, இந்தியாவை மீட்க கட்டபொம்மன் போன்ற மன்னர்கள் வீரப்போர் புரிந்தனர். பின்னர் மகாத்மா காந்தி தலைமை ஏற்று, சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தினர். சுதந்திரப்போர் பற்றிய அனைத்து விவரங்களையும் எளிய இனிய நடையில் கதைபோல் கூறுகிறார் மு.அப்பாஸ் மந்திரி. ஏராளமான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மாணவ மாணவிகள் அவசியம் […]

Read more

கம்பன் தமிழும் கணினித் தமிழும்

கம்பன் தமிழும் கணினித் தமிழும், நா. முத்து நிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. இரண்டாம் பரிசு பெற்ற பாரதியார் கவிதை நாட்டுப்பற்று பற்றிய பாடல் எழுதப் போட்டி ஒன்று தூத்துக்குடியில், நடைபெற்றிருக்கிறது 1914இல் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அதில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றவர் மகாகவி என்று கொண்டாடப்படுகிற பாரதியார். அந்தப் பாடல்தான் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று குறிப்பிட்டுச் சுவையான சில செய்திகளைத் தருகிறார் நா. முத்துநிலவன் தம்முடைய கட்டுரை ஒன்றில். கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசௌந்தரி, இந்திய மருத்துவ மையம், சென்னை, பக். 1217, விலை 1000ரூ. இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1990இல் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தப் புத்தகம் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியரும் மகப்பேறு நிபுணருமான டாக்டர் ஞான சௌந்தரியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஓர் அனுபவமே இந்த நூலை எழுதுவதற்கு முக்கிய காரணம். அவரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இரண்டு பிரசவத்திலும் பெண் குழந்தைகளே பிறந்தன. மூன்றாவது பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண், டாக்டரின் […]

Read more

உலகத் தமிழ்க் கவிதைகள் எமது மொழி பெயர் உலகினுள்

உலகத் தமிழ்க் கவிதைகள் எமது மொழி பெயர் உலகினுள், தொகுப்பு செல்வா கனநாயகம், நூல் உரிமை தமிழ் இலக்கியத் தோட்டம், விகடன் வெளியீடு, பக். 288, விலை 250ரூ. உலகம் முழுவதும் உள்ள 78 தமிழ்க் கவிஞர்களின் இலங்கை, இந்தியா மற்றவை நாடுகளில் வாழும் தமிழர்களின் கவிதைகளை மிக நறுக்காகத் தேர்வு செய்து, அற்புதமானவை, மற்றவர்களுக்கு முன்னுதாரமாக ஒரு நூலை விகடன் பிரசுரம் வாயிலாக வெளியிட்டுள்ளது தமிழ் இலக்கியத் தோட்டம். கவிஞர்களின் பட்டியலை இறுதி செய்வது பெரும் பணி. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கவிஞரின் […]

Read more

இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள்

இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள், சண்முக செல்வகணபதி, அய்யா நிலையம், பக். 224, விலை 225ரூ. தமிழ்ப் பண்பாடு சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. நடனம் என்பது சமயஞ்சார்ந்த பண்பாட்டுக் கூறு. தமிழ்நாட்டில் நடனம் முதலில் கூத்து என்றும், பின்னர் சதிர் என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பரதநாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பரதநாட்டியத்தை வழிவழியாகப் பயின்றும் பயிற்றுவித்தும் வந்திருக்கும் மரபினரில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் நாட்டிய கலைக்கு ஆற்றியுள்ள பணிகள் பற்றியும், அவர்களுடைய நடனம் பயிற்றுவித்த ஆசிரியர்கள், அவர்களிடம் நடனம் பயின்ற […]

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-1.html நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும் படித்தும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் […]

Read more

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. விறுவிறுப்பான தகவல்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி. என்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் இந்நூலாசிரியர் தகவல்களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றப் பார்வையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் என்னும் […]

Read more
1 2 3 4 5 8