வாழ்வைப் புரட்டும் மந்திரம்
வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ.
சாதனையாளர்களின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றியாளர்களாகப் பரிணமிக்க முடியும். சாதனையாளர்கள் அவர்களின் வெற்றி இலக்கை அடைய எடுத்த முயற்சிகளையும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் படிப்பினைகளாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் சாதிக்க எத்தனை துறைகிளில் கவனம் செலுத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. விபத்து ஒன்றில் வாழ்க்கையின் விளிம்புக்குச் சென்று மீண்ட தன்னம்பிக்கையாளர் ரீவ்ஸ், விடுடக் கொடுப்பவர்கள் எதையும் இழப்பதில்லை என்று உணர்த்திய சு மர்த்தி, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த வின்ஸ்டன் சர்ச்சில், தன் கடின உழைப்பால் கிடைத்த அங்கீகாரத்தை எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற கூறிய ஏ.ஆர். ரஹ்மான், கணிதத்துறையில் மாபெரும் சாதனையாளரான கணிதமேதை ராமானுஜம் என பல்வேறு சாதனையாளர்கள் அவர்களுடைய வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடித்த தாரக மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து முன்னேறத் துடிப்பவர்களுக்காக நச்சென்று தந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமணி, 20/4/2015.