சிகரம் தொடுவோம்

சிகரம் தொடுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 192, விலை 145ரூ.

ஒரு மனிதனின் எண்ணத்தையும், செயலையும் செம்மைப்படுத்துவதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது. ஒருவனின் மனதையும் செயலையும் எவ்வாறு தூய்மைப்படுத்துவது? தோல்வியிலிருந்து எதிர் நீச்சல் போட்டு எப்படி வெற்றி பெறுவது? துன்பங்களை எப்படிக் கடப்பது? என்பனவற்றைத் தெளிவுபடுத்தும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு செயலால் பிறருக்குத் துன்பம் ஏற்படக்கூடாது. விமர்சனங்கள் ஒருவருடைய முன்னேற்றத்திற்கு சாதகமாகவும் அமையும், பாதகமாகவும் அமையும். ஆகவே விமர்சனங்கள் எப்போதும் ஆரோக்கியமானவையாகவே இருக்க வேண்டும். செய்யும் செயலில் தோல்வியோ அல்லது தவறோ நேரிடும்போது அதை தைரியமாக ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்குவதே நல்லது. இவ்வாறு ஒரு மனிதனை ஒழுங்குபடுத்துவதற்கான அனைத்தையுமே இந்நூல் எடுத்துரைக்கிறது. புகழைப் பகிர்ந்தளியுங்கள். குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள். (Share the glory accede the blame), எண்ணங்கள் எப்படியோ அப்படியே வாழ்வு அமையும் (Our life is what out thoughts make it) என்பன போன்ற அனைத்து கருத்துகளும் வாசிப்போரின் கவனத்தை ஈர்த்து, சிந்திக்க வைக்கிறது. சிகரத்தைத் தொடுவதற்கான சிறந்த வழிகாட்டி இந்நூல். நன்றி: தினமணி, 20/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *