தாய்
தாய், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 290ரூ.
புகழ் பெற்ற ரஷிய நாவலான தாய் உரைக்கின்ற கருத்தாலும், உயிரோட்டமுள்ள பாத்திரப் படைப்புகளாலும், உணர்வுள்ள நடையாலும் உலகின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இதை எழுதிய மார்க்சிம் கார்க்கி, அழியாப் புகழ் பெற்றுவிட்டார். 127 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, கோடிக்கணக்கில் விற்பனையான புத்தகம் இது. குடிகாரக் கணவனிடம் அடிபட்டு, மிதிபட்டு அல்லற்பட்ட நிலாவ்னா, மகன் பேவலைத் திருத்தி, அவனை அறிவார்ந்த ஆற்றல் மிக்க புரட்சித் தலைவனாக உருவாக்கி, தன்னை புரட்சி இயக்கத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டவள். அவளே இக்கதையின் கதாநாயகி. அன்னையாக அனைவரது உள்ளத்திலும் உயர்ந்து நிற்கும் தாய் ஆவாள். மார்க்சிம் கார்க்கியின் அனல் கக்கும் கருத்துக்களை எளிய தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் தொ.மு.சி. ரகுநாதன். நன்றி: தினத்தந்தி, 20/8/2014.
—-
கல்யாணப் பொருத்தம் காண்பது எப்படி?, தேசியூர் எஸ்.வி.சாஸ்திரி, தேசியூர் வி.ஜே.ராமன், விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 40ரூ.
மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணப் பொருத்தம் எப்படி இருக்கிறது என்பதை நாமே தெரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 20/8/2014.